பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ (ஆன்ழெல்லோவைப் பார்த்து) இந்தப் பெண்ணைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இவள் வாக்கு தெய்வவாக்கு. இவளைவிடப் பதிவிரதையை வேறெங்கும் பார்க்கமுடியாது. ஆகையால் இவள் வாயிலே இருந்து வருவதெல்லாம் வேதம். இவள் சொல்வதையெல்லாம் செய்ய வேண்டும் என்பது: தானே உங்கள் நோக்கம். ஆன்ழெல் : வீண் பேச்சு. கத்தேரினா : உண்மைதான். நாம் மூவரும் எங்கே இருக்கிறோம். நாம் மூவரும் இந்தக் கொடுமையான நாட்டில்தான் இருக்கிறோம். இந்த உதவாக்கரை குடியரசில்தான் இருக்கிறோம். குடியரசென்ற பெயரை வைத்துக்கொண்டு வெட்கமும் மானமு. மின்றி நடக்கிற விலங்குகளை விடக் கீழாய் நடக்கிற வேனிஸ் குடியரசில் இருக்கிறோம். ஒரு பேதைப் பெண்ணைக் கொலைசெய்யத் துணிகிற ஆணை இந்தக் குடியரசிலன்றி வேறெங்கும் பார்க்க முடியாது. அதிலும் நீங்கள் இந்தக் குடியரசின் வலக்கை போன்ற சர்வாதிகாரி! ஒரு பெண்ணைக் கொலைசெய்ய அதிலும் மறைவாக மற்ற்வர் கண்ணுக் குத்தெரியாது.ஆதரவற்ற பெண்ணை-தாய்-தந்தை உற்றார் உறவினர் இல்லாத இடத்தில் கொலை செய்யத் துணிகிற வீரரை சர்வாதிகாரியாக உடைய வேனிஸில் எந்தப்.பேச்சும் விண்பேச்சுத்தான்; ஏதோ என் முன்னோர்கள் என்னைப்போலத் தவறிழைத்த பெண்ணைக் கொன்றதாகச் சற்றுமுன் உம் திருவாக்கால் கூறினீர். அவர்கள் உங்களைப் போலவா செய்தார்கள். வேனிசெல்லாம் திரண்டி ருந்த பொதுமன்றத்திலே கொலைநடத்தினர். நீங்கள் அப்படியல்ல, இதை யாராவது கேட்டால் சிரிப்பார்கள். நீங்கள் இருவரும் இருந்து செய்கின்ற இந்தக்கொலை வேனிஸ் குடிமக்கள் யாவரும் இருந்து