பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 9.1 செய்வதைப் போன்றது என்பது உங்கள் நினைவா இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் வேனிஸ் சர்வாதிகாரி இந்தப் பெண் (தீஸ்பைக்காட்டி) பெண்ணல்ல பேய்-சர்வாதிகாரியின் வைப்பாட்டி பேதாதா. வேறு குடிமக்கள் எதற்கு? - (ஆன்ழெல்லோ-கத்தேரினா கையைப்பிடித்து) எடுத்துக்குடி நேரமாகிறது. - (கத்தேரினா நஞ்சிருக்கிற மேஜையில் நெருங்கு கிறாள் . . . . நான் சாகவேண்டுமென்பது உங்கள் முடிவு- அவ்வளவு தானே ஊம் சரி. . (நஞ்சு சீஷாவை எடுக்கக் கையை நீட்டுகிறாள்.) " ஓ! கொடுமை! வேண்டாம்! வேண்டாம்! நான் குடிக்கமாட்டேன். இதற்குள்ளாகவா நான் இறக்க வேண்டும். வாழ்க்கைப்பாதையில் அடிஎடுத்துத்தானே. வைத்துள்ளேன். அதற்குள்ளாகவா நான் இறக்க வேண்டும். நன்றாகச் சிந்தித்து முடிவுசெய்யுங்கள் அரசே! நீங்கள் சர்வாதிகாரி! நீங்கள் எதுவேண்டுமா னாலும் செய்யலாம். ஆனால் ஒரு பெண் பேதமையே குடிகொண்ட இனம். ஆதரவற்றவள் தற்காக்க வலிவற்றவள். உற்றார் உறவினர் அற்றவள் நட்பற்ற நங்கை-வேண்டாம். எங்கோ ஒரு மூலையில்கூட அல்லாமல் தன் வீட்டில்-மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் நஞ்சூட்டிக் கொல்வது இழிவான செய்கை-வேண்டாம். அரச குடும்பத்தினர்க்குரிய பண்பல்ல. ஆண்மையல்ல; வேண்டாம் வேண்டாம். அமமா அம்மா அம்மா! திஸ்ப் : பாவம் கத்தேரினா: பாவம்: பாவம் என்றுதானே சொன்னீர் கள். ஆம்! நன்றாகக் கேட்டேன். உங்களுக்காகிலும் அந்த இரக்கம் இருந்ததே! நீங்களே சற்றுச் சிந்தியுங்