பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ கள். என்னைக் கொலை செய்யப் போகிறார்கள். நான் உங்கள்மீது தவறாக ஏதேதோ எண்ணி விட்டேன். நீங்கள் ஒருக்காலும் இதற்கு இசைந்திருக்க மாட்டீர்கள். பெண்ணல்லவா-பெண்மை என்பது என்ன என்று பெண்களுக்குத்தானே தெரியும். நான் யாவும் உங்களிடத்தில் விளக்கமாகக்கூறுகிறேன். நீங்கள் அவருக்குச் சொல்லுங்கள். சர்வாதிகாரி உங்கள் பேச்சைக் கேட்டார். என் அழுகையும் கூக்குரலையும்விட உங்கள் பேச்சு அவரை அடக்கி ஆட்கொள்ளும். இந்தச் செயல் ஆண்மையற்ற இழிவான செயல் என்று அவருக்குச் சொல்லுங்கள். ஆம். நீங்கள்தான் சொல்லவேண்டும். நான் ஏதேதோ ஆத்திரத்தில் புத்தியற்று சொல்லிவிட்டேன். என்னை மன்னியுங்கள். நான் உங்களைப் புரிந்துகொள்ளாது உங்களை நிந்தித்துப் பேசிவிட்டேன். பொறுத்துக் கொள்ளுங்கள். கோபப்படாதீர்கள், நான் கடவுளறியச் சொல்லுகிறேன். நான் ஒரு வினாடிகூட ஒழுங்கு தவறி நடந்தது இல்லை. என் கணவனுக்குத் துரோகம் செய்ததே கிடையாது. சத்தியமாகச் சொல்லுகிறேன். இதுவரையில் நான் உண்மையாகக் கற்புள்ளவளாகவே இருந்துவருகிறேன். அவர் என்னை நம்பவில்லை. நான் சொல்லுவதையும் நம்பமாட்டார். ஆண் இனமே பெண் பேச்சை நம்பாது. அது அவர்கள் உடலிலே ஊறிய ஒன்று. எவ்வளவு உண்மையை எடுத்துக்கூறினாலும்கூட அவர்கள் நம்பமாட்டார் கள். நீங்கள் கூடவா நம்பமாட்டீர்கள்-என் போன்ற பெண்ணாயிற்றே நீங்கள். உங்களுக்குக் கூடவா என் உள்ளம் தெரியவில்லை. சாவு- அதை நினைக்கும் போதே எனக்குப் பயமாக இருக்கிறதே-வேண்டாம் வேண்டாம். என்னைச் சாகடிக்கவேண்டாம். அவரிடத்திலே சொல்லுங்கள். என்னைச் சாகடிக்க வேண்டாமென்று சொல்லுங்கள். ஆன்ழெல் : ஊம். நேரமாகிறது ஆகட்டும்.