பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 9.3 கத்தேரினா பார்த் தீர்களா நான் உங்களிடம் சொல்லி உண்மையை விளக்கி உங்கள் மனதைக் கவர்ந்து விடுவேனாம். அதைக்கூடத் தடுக்கிறார். (ஆன்ழெல் லாவைப் பார்த்து) . கொடிய மனிதரைய்யா நீங்கள். ஆன்ழெல் : போதும்-போதும் கத்தேரினா!. தவறுக்கு எப்பொழுதும் தண்டனைதான்-சாக்குழி சவம் கேட்கிறது. ஏமாற்றப்பட்ட கணவன் மனைவியின் உயிரைக் கேட்கிறேன்-வீணாக எதற்காகப் பேசிப் பேசிக் காலம் போக்குகிறாய். . . - - கத்தேரினா : முடியாது. கடவுள்மேல் ஆணையாகக் கூறுகிறேன். முடியாது. - ஆன்ழெல் (விஷத்தைக்காட்டி) எடுத்துக்குடி. கத்தேரினா : குடிக்கமாட்டேன். ஆன்ழெல் : என்ன-குடிக்கமாட்டாயா? சரி-அப்படியானால் சரி. முதல் முடிவுதான் சரி-ஏய்? யார் அங்கே, என் வாளை எடு - எடுத்துவா! நானேபோய் எடுத்து வருகிறேன். . . (கோபமாக வாளெடுக்க அறைக்கு ஒடுகிறான்.) களம்-9 . .. கத்தேரினா-தீஸ்ப் திஸ்ப் : இன்னும் சில வினாடிகளே நாம் தனித்துப் பேச முடியும். சர்வாதிகாரி அதற்குள் வந்தாலும் வரலாம். நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள், அவன் உங்களைக் காதலிக்கிறான். உங்களுக்காக அல்ல நீங்கள் இப்பொழுது நினைக்க வேண்டியதுஅவனுக்காக. அவனுக்காக மட்டுமல்ல. உங்களுக் காகவும் கூறுகிறேன். சர்வாதிகாரி சொல்வதைச்