பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - விக்டர் வியுகோவின் ஆன்முெல்லோ செய்யுங்கள். இல்லையென்றால் நீங்கள் தப்ப முடியாது. இதைவிட விளக்கமாக நான் சொல்ல. மாட்டேன். நான் சொல்வதைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்கள். சிந்திக்கமாட்டேன் என்கிறீர் கள். இப்பொழுது, சற்றுமுன்புதான் பாவம் என்று என் வாயிலிருந்து தப்பி வந்துவிட்டது.அந்தச் சொல் சர்வர்திகாரி முன்பு-பைத்தியக்காரி போல-அந்தச் சொல்லை உரக்கப் பலதடவை கூறிவிட்டீர்கள். சர்வாதிகாரி என்ன நினைப்பார். அவர் சந்தேகப்பட மாட்டாரா? நான் உங்களிடத்தில் உண்மையை விளக்கிக்கூறினால் அதை மனதிலேயே காப்பாற்றுகிற நிலையில் நீங்கள் இல்லை. துடுக்குத்தனமாக அதை வெளியிட்டால் திட்டமெல்லாம் துரளாகிவிடும். அதோடு யாவும் தீர்ந்தது. அதற்காகத்தான் சொல்லு கிறேன். அவர் இச்சைபோல நடவுங்கள். நஞ்சுதான்ே குடிக்கச் சொல்லுகிறார். குடியுங்கள். மறுக்காதீர்கள். வாள் உங்களை ஒருக்காலமும் மன்னிக்காது. நான் சொல்வது புரிகிறதா. வீணாக மறுக்காதீர்கள். நஞ்சையே குடியுங்கள். வாள்வேண்டாம். நான் இதைவிட இன்னும் உங்களுக்கு என்ன சொல்வ. தென்றே புரியவில்லை. அவன் உங்களைக் காதலிக் கிறான். யாராவது ஒருவர் நன்மை செய்யவேண்டும்? யாராவது ஒருவர் நன்றியைக் காதலை விளக்க வேண்டும்-நான் சொல்லுவது உங்களுக்கு விளங்க வில்லை - ஊகும். உண்மையைக் கூறக்கூடாது. நான் சொல்வதைக் கேளுங்கள். நஞ்சைக் குடியுங்கள். மறுக்காதீர்கள். - - கத்தேரினா என்னம்மா சொல்லுகிறீர்கள். திஸ்ப் : என்ன சொல்லுகிறாரோ அதைச் செய்யுங்கள். மறுக்கவேண்டாம் ஒரு வார்த்தைகூட வேண்டாம். உன் மணாளர் என்மட்டில் வைத்திருக்கிற நம்பிக்கையைக் கெடுக்காதீர்கள். தெரிகிறதா.