பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 6 - விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ இறக்கின்ற கொடுமையான நிலை ஏற்பட்டுங்கூட வேறொரு உயிரைக் காப்பாற்றுகிறேன். உன்போலல்ல நான். பெண்ணினத்தின் புகழையே கெடுத்து விட்டாயே கொலைகாரப் பேயே! - - (நஞ்சைக் குடிக்கிறாள்) தீஸ்ப் : (தனக்குள்ளே) வீணான பேச்சு-பாவம் ஆன்ழெல்லோ : (வாளை வைத்துக்கொண்டிருக்கிற வேலையாட்களைப் பார்த்து) சரி நீங்கள் போகலாம். கத்தேரினா : ஐய்யோ நஞ்சி தலைக் கேறிவிட்டதே உடல், நடுங்குகிறதே (தீஸ்பை முறைத்துப்பார்த்து) நயவஞ்சகப்பேய்! கொலைகாரப்பிசாசு! ஆன்ழெல்லோ வைப்பார்த்து இப்பொழுது மகிழ்ச்சிதானேஉங்களுக்கு? நான் இனி இறக்கப்போகிறேன். இனி நான் உங்களுக்குப் பயப்படவேண்டியதில்லை. நான் சொல்லுவதை இப்பொழுதாகிலும் கேளுங்கள். கொடிய கணவனே! நான் ஒரு மனிதனைக் காதலித்தது உண்மைதான். ஆனால் நான் மாசு மருவற்றவள். தூய்மை நிற்ைந்தவள். கட்டிய கணவனை இதுவரையில் ஏமாற்றாதவள். கற்பினின்றும் சிறிதும் வழுவாதவள். ஆன்ழெல் : எனக்கு நம்பிக்கை இல்லை. இஸ்ப் : (தனக்குள்) நான் நம்புகிறேன் அவள் துாய்மை யானவள். அதில் சிறிதுகூட ஐயமில்லை. கத்தேரினா : தலைசுற்றுகிறது. நிற்கமுடியவில்லை... விழுந்துவிடுவேன் போல் தோன்றுகிறது...வேண்டாம் இந்த இருக்கை வேண்டாம். என்னைத் தொடாதீர் கள். நான் முன்னமே சொன்னேன். நீங்கள் கணவனல்ல. கணவனென்ற அந்தத் துாய சொல்லுக்கே ஏற்றவரல்ல. நீங்கள் ஆண்மை யற்றவர். மனிதப் பண்பற்றவர். ஆம் கயவாளி.