உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் விளைத்த சிறு குறும்புகள் 105 விளையாட்டைக் கண்டு கண் படைத்த பயனைப் பெறுமாறு அம்புலியை அழைக்கின்றாள். கண்ணன் செய்யும் குறும்புகள் பல நிகழ்ச்சிகளைக் கொண்டவை. ஒரு நிகழ்ச்சி: கண்ணன் புழுதியில் விளை யாடும்போது உடம்பில் வியர்வை நீர் உண்டாகும். அவ்வேர்வை நீரால் நனைந்து புழுதி படிந்த இடம் சேறாகவும், நனையாத இடம் புழுதி மண்ணாகவும் இருக்கும். அப்படியே ஓடிவந்து தாயை அணைத்துக்கொள் வான். அந்தச் சேறும் புழுதியும் தாயின் உடலின்மீது படிந்துவிடும். பின்னர் அன்னைக்குத் தெரியாதபடி வீட்டினுள் புகுந்து சட்டியில் வைத்திருக்கும் தயிரையும் மிடாக்களிலிருக்கின்ற வெண்ணெயையும் உண்பான்; அவன் பட்டி மேய்ந்து திரியும் கன்று போன்றவன். இதனைப் பெரியாழ்வார், புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து அட்டி யமுக்கி அகம்புக் கறியாமே சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும்.உண் :பட்டிக் கன்றே. (1.7:5) (புட்டி-திருவரை; அட்டி அமுக்கி-இட்டு உறைக்கப்பூசி; அகம்.வீடு; அறியாமே..தெரியாதபடி, தடா. மிடr) என்று அநுசந்தித்து மகிழ்கின்றார் யசோதைப் பிராட்டி நிலையில், திருவாய்ப்பாடியிலுள்ளார் தம் தயிர், வெண்ணெய், பால் முதலியவற்றைக் கண்ணனுக் கெட்டாதபடி உயரத் தில் உள்ள உறிகளின்மீது சேமித்து வைப்பர். இதைக் கண்டு கண்ணன் ஒரு பொத்த உரலைத் தேடிக் கண்டு பிடித்து உருட்டிக்கொண்டு வந்து தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு அதன் மேலேறி உறியை எட்டி அதிலுள்ளவற்றை விழுங்குவான். இந்த நிகழ்ச்சியில் விஷ்ணுசித்தர், -