உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 விட்டு சித்தன் விரித்த தமிழ் கம்சனால் ஏவப் பெற்றிருந்த சானூரன், முஷ்டிகன் என்ற மலைபோன்ற இருபெருமல்லர்கள் சிறுவர்களை உக்கிரமாக எதிர்த்து மலைந்தனர். யாதவச் சிறுவர்கள் அவர்கள் இருவரையும் மற்போரிலேயே வென்று கொன்றனர். இந்த நிகழ்ச்சியை, இருமலைபோல் எதிர்ந்த மல்லர் இருவர்.அங்கம் எரிசெய்தாய் (2.2:8) என்றும், தெருவின்கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே (2.7:6) என்றும் ஆழ்வார் அதுசந்திப்பதைக் கண்டு மகிழலாம். அரண்மனைக்குப் போகும்பொழுது கம்சனுக்கு ஆடைகளை வெளுக்கும் வண்ணானைக் கொன்று அவனிடமிருந்து ஆடைகளைப் பறித்துக் கொண்டமை, கஞ்சனுடைய வில்லை முறித்தமை, குவலயாபீடத்தைக் கொன்றமை இவை போன்ற செயல்கள் தெருவின்கண் தீமைகள் செய்து என்பதில் அடங்கும். 7. கம்ச வதம்: யாதவச் சிறுவர்கள் மல்லர்களை முடித்து விட்டு உள்ளே போகும்போது கம்சன் சிறுவர் களைக் கோபித்து எதிர்க்கின்றான். சிம்மாதனத்தின்மீது இருவரும் பாய்ந்து அவனது திருமுடியை வீழ்த்துகின்றனர். பின்னர் அவனைத் தரையில் தள்ளி அடித்து தொறுக்கிக் கொன்று விடுகின்றனர். இதனை ஆழ்வார், கறுத்திட் டெதிர்கின்ற கஞ்சனைக் கொன்றான் (2.2:6) (கறுத்து.சினங்கொண்டு) என்றும்,