பிருந்தாவனத்தில் வேணுகோபாலன் 珍6签 ஆகவே நீங்கள் யாவரும் அவன் செல்லும் வழியை விட்டு, ஒதுங்கி நில்லுங்கள்' என்பது குறிப்பு. . . . ஒரு பெண்பிள்ளையின் தாய் சொல்லுகின்றாள்: கண்ணன் காட்டில் கன்றுகளை மேய்த்துவிட்டுத் தன்னே ராயிரம் தோழர்கள் உடைவாள், சுண்டுவில், பூச்செண்டு, கோல், உத்தரீயம், ஆகியவற்றைக் கண்ணனுக்கு வேண்டும் போது தருவதற்காகத் தாங்கிக்கொண்டு வர, கண்ணன் உயிர்த் தோழன் ஒருவனது தோளை ஒரு திருக்கையினால் ஊன்றிக் கொண்டும் மற்றொரு திருக்கையினால் சிதறிப் போன பசுக்களின் கூட்டம் திரும்பி வருவதற்காக ஊத வேண்டிய சங்கை ஏந்திக் கொண்டும் வாடிய முகத்துடன் வந்து கொண்டிருக்கின்றான், அவனுடைய திருமேனி அழகையும் சமுதாய சோபையையும் என் மகள் 5Tಣಾr நேரிடுகின்றது. எல்லோரையும்போல் பொதுவாகத்தான் பார்த்தாள்; பிறகு உற்று நோக்கினாள். இதனையே காரணமாகக் கொண்டு ஆய்ச்சேரியிலுள்ளவர்கள் இரு வருக்கும் அடியோடில்லாத ஒரு சம்பந்தத்தைக் கற்பித்துச் சொல்லுகின்றனர். இது தகுமோ?' என்று முறையிடு கின்றாள் (3). காட்டிலிருந்து திரும்பும் கண்ணபிரான் வரும் தெருவி லிருக்கும் ஆயர் மங்கைபொருத்தி அழகெலாம் திரண்ட கண்ணனைக் காண்கின்றாள். இந்த அழகனைத் தன் தோழியும் கண்டு களிக்கவேண்டும் எனக் கருதி வீட்டினுள் இருப்பாள் ஒரு தோழியை நோக்கித் தோழி! இதுகாறும் நாம் கண்டவர்களில் ஒருவரையும் ஒப்பாகச் சொல்ல முடியாத ஒரு பேரழகன் வந்து கொண்டிருக்கின்றான். அவனை உடனே வந்து கண்டு மகிழ்க' என்று அழைக் கின்றாள். அவளோ, அவன் யார்? எக்குடியிற் பிறந்தவன்? என்பன போன்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு வரத் தாமதிக்கின்றாள். உடனே இவள், "ஒருவன் இந்த இடைச் சேரியில் வந்து பிறந்து பற்பல அற்புதச் செயல்களைச் செய்துள்ளான் என்று நாம் கேள்வி
பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/196
தோற்றம்