உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 விட்டு சித்தன் விரித்த தமிழ் இதை எவரிடம் சொல்லுவேன்? ஐயோ! நீங்கள் எல்லாம் உங்கள் தாய்மாருக்கு அடங்குவதில்லையா?" என்று சில இளம்பருவப் பெண்களோடு சேர்ந்து கொண்டு வருந்து கின்றாள். வெளியில் செல்லவிட்டால் தீ நட்பு நேர்ந்துவிடுகின்றது என்று எண்ணி முற்றத்தில் விளையாடச் சொன்னால் நேரிடும் விளைவுகளைச் சொல்லுகின்றாள்: பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் முற்றத் திளைக்கலுறில் சங்கு சக்கரம் தண்டு வாள்வில்லும் அல்லது இழைக்கலுறாள் கொங்கை இன்னும் குவிந்து எழுந்தில; கோவிந்தனோடு இவளைச் சங்கை யாகி என்உள்ளம் நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே." பொங்கு-துண் ணிய; சிற்றில்-கொட்டகம்; இன்னம். இன்று அளவும்; குவிந்து.முகம் திரண்டு; சங்கை ஆகி-ஐயுற்று; உள்ளம்.நெஞ்சம்; தட்டுளுப்பு. தடுமாற்றம்} என்பது பாசுரம். இவள் முற்றத்தில் சிற்றில் இழைத் தாலும் எம்பெருமானது சங்கு, சக்கரம், தண்டு, வாள், வில் ஆகிய பஞ்சாயுதங்களை இழைக்கின்றாள்; சிற்றில் இழைப்பதில்லை. முலைகளோ இன்னும் திரண்டு முகம் காட்டவில்லை. இந்த நிலையில் இவள் இளமையை நோக்கினால், தலைமகனோடு இவள் இணங்கினான்: என்று சொல்ல முடியவில்லை; இவள் செய்யும் படிகளைப் பார்த்தால் அவ்விணக்கம் ஐயுறும்படியாக உள்ளது. ஆகையால் ஒன்றையும் அறுதியிட முடியாமல் என் நெஞ்சு தடுமாறுகின்றது' என்கின்றாள். உள்ளுறையில் 11. பெரியாழ். திரு. 3.7:3