உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரத்துவ நிர்ணயம் 星盘 கொள்ளுகின்றனர். மழைக் காலங்களில் தேவையான வற்றை மற்றை எட்டுத் திங்களில் தேடி வைத்துக் கொள்ளு கின்றனர். முதுமையில் தேவையானவற்றை இளமையில் முயற்சி செய்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட விவேகிகள் மறுமைக்கு வேண்டியவற்றை இம்மையில் தேட முயல வேண்டாவோ?’ என்கின்றான். தானும் இப்போது அந்த வழியைத்தான் நாடிச் செல்லுவதாக உரைக்கின்றான். மாறுவேடம் பூண்டு வந்த மன்னன் மனத்தில் திருத் தலப் பயணி சொன்ன செய்தி ஆழப் பதிந்து விடுகின்றது. அவன் நகர் சோதனையை முடித்துக் கொண்டு திருத்தலப் பயணியை அரண்மனைக்கு அழைத்துச் சென்று நல்விருந்: தோம்பி, இதைத் தாங்கள் விருப்பம்போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேண்டிய பொருளுதவி செய் கின்றான். அதிகாலையில் அந்தப் பயணி சேது தரிசனம் செய்து கொள்வதற்காக விடை பெறுகின்றான். மறுநாள் அரசவை கூடுகின்றது. சிற்றரசர்களும் சேனைத் தலைவர்களும் வணங்கி நிற்கின்றனர். வைதிகர் களும் முத்தமிழ்ப் புலவர்களும் ஆசி கூறுகின்றனர். அழகிய பெண்கள் இருபுறமும் நின்றவண்ணம் சாமரை வீசு கின்றனர். பாண்டிய மன்னன் முத்துப்பந்தரின் கீழ் இரத்தினம் இழைக்கப் பெற்ற சீரிய தங்கச் சிங்காதனத்தில், மார்பில் முத்தாரம் மின்ன தாரகை நடுவண் காட்சி தரும் முழு மதியம்போல் கொலு வீற்றிருந்து அரச காரியங்களை வழக்கம்போல் கவனிக்கின்றான். எனினும் முதல் நாள் இரவில் நடந்த நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் அவன் உள்ளத்தில் தோன்றிச் சிந்தனையில் ஆழ்த்துவதால் அவன் முகத்தில் பொலிவு காணப்பெறவில்லை. நமது மன்னர் பெருமானுக்கும் ஏதோ மனக்குறை இருக்கும்போல் தோன்றுகின்றதே, என்றும் இருக்கும் முகத்தின் களை தென்படவில்லையே' என்று வியப்பும் விசனமும் கலந்த பாவனையில் காணப்பட்டனர் அமைச்சர்கள். * ・ 。ー・ふ