உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 விட்டு சித்தன் விரித்த தமிழ் பலரையும் மங்களாசாசனத்திற்குத் துணையாகக் கூட்டிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றார். உலகில் உள்ள மக்களை ஆராய்ந்து பார்த்ததில் அவர்கள் (1) செல்வத்தை விரும்புபவர்கள், (2) ஆன்மாநுபவமாகிய கைவல்யத்தை விரும்புபவர்கள், (3) எம்பெருமானுடைய அநுபவத்தை மட்டிலும் விரும்புபவர்கள் என்று மூவகையாக இருப்பதைக் காண்கின்றார். இந்த மூவகை அதிகாரிகளில் செல்வத்தை விரும்புகிறவர்களும் கைவல்யத்தை விரும்புகிறவர்களும் பயனை எதிர்பார்ப்பவர்களாக இருந்தாலும் அந்த அற்பு பலனுக்காவது எம்பெருமானைப் பணிந்து வழிபடு கின்றார்கள் என்பதால் அவர்களையும் திருத்திப் பணி கொள்ளலாம் என்று அறுதியிட்டு இம்மூவகை அதிகாரி களையும் மங்களா சாசனத்திற்கு அழைக்க விரும்பி முதன் முதலாக எம் பெருமானுடைய அநுபவத்தையே விரும்பும் ஞானிகளை மட்டிலும் மூன்றாவது பாசுரத்தில் அழைக் இன்தார். • பகவத் விஷயம் தவிர மற்ற விஷயங்களில் செய்யும் கைங்கரியமெல்லாம் செய்வதற்குச் சிரமமாயும், சிரமப் பட்டுச் செய்தாலும் அந்தத் தேவதைக்கு மன நிறைவு இல்லாமலும், ஒருவாறு மன நிறைவு தருவதாக இருந்தா லும் அற்ப பலனைக் கொடுப்பனவாகவே இருக்கும்; அவை துயரத்தையும் விளைவிக்கும். பகவத் விஷயத்தில் செய்யும் கைங்கரியமோ எளிதாகச் செய்யக் கூடியதாகவும், விரைவில் எம்பெருமானை உவப்பிக்க வல்லதாயும் நிரந்தர மாகப் பலனையளிப்பதாகவும் இருப்பதால் அப்படிப்பட்ட பகவத் கைங்கரியத்தில் ஊன்றியிருப்பவர்களை வாழாட் பட்டு கின்நீர் என்று விளிக்கின்றார். அப்படிப்பட்ட அதிகாரிகள் மிகவும் அருமைப்படுபவர்கள் என்பதைக் காட்டுகின்றார் உள்ளீர்கள்" என்று. ‘மண்ணும் மணமுங் கொண்மின் : மண்கொள்ளுகை யாவது - பெருவிழாவில் திருமுளைத் திருநாளுக்கு புழுதி மண் சுமப்பது. மணம் கொள்கையாவது - அந்தப் பெரு