பல்லாண்டு பாடிய பட்டர்பிரான் నీ விழாவில் மிகவும் ஈடுபாடு கொண்டிருப்பது. முற்காலத்தில் அடிமையோலை எழுதும்போது மண்ணுக்கும் மணத்துக் கும் உரியேனாகக் கடவேன் என்று எழுதும் வழக்கம் இருந்தமை சிந்திக்கத் தக்கது. முதலடியில் உள்ளிரேல்" என்று ஆழ்வார் உரக்கக் கூவினபடியைக் கேட்டவர்கள் அவரழைத்த வேறுபாட்டை உணராமல் ஓடிவருகின்றனர். அவர்களில் வயிற்றுப் பிழைப்புக்காகக் கீழான சேவை செய்து பிழைப்பவர்களும் சேர்ந்திருந்தபடியால், அவர் களை, கூழாட்பட்டு புகுதலொட்டோம் என்று விலக்கித் தள்ளுகின்றார் இரண்டாம் அடியால், பகவத் சம்பந்தத் தால் தமக்கு உண்டாகின்ற பெருமையையும், தாம் காலம் போக்கும் முறையையும், அருளிச் செய்கின்றார் பின்னி ரண்டு அடிகளில், நாங்கள் ஏழு தலைமுறைகளிலும் - அநாதிகாலமாக - எம்பெருமானை உபாய மாகவும் உபேயமாகவும் கொண்டு மங்களாசாசனம் புண்ணுகின் றோமாகையால், மிகவும் அழகாயுள்ள எங்கள் குழுவில் நீங்கள் நுழைதல் ஆகாது" என்று வயிறு வளர்க்கும் வம்பர்களை விலக்கித் தள்ளுகின்றார். மூன்றாவது பாசுரத்தில் (வாழாட்பட்டு) பயன்கருதாது அடிமைத் தொழில் புரியும் முமுட்சுகளை அழைத்தாரல் லவா? அப்படி அழைக்கும்போது ஏழாட் காலும் பழிப்பிலோம் ஆாங்கள்’ என்று தம்முடைய பெருமையையும் சொல்வி பழைத்தார். அந்த முமுட்சுகளும் நாங்களும் உம்மைப் போலவே ஏழு தலைமுறைகளாக . அநாதிகாலமாக . அடிமை செய்கின்றவர்கள்’ என்று தங்களுடைய பெருமை யையும் எம்பெருமானுக்கு மங்களா சாசனம் பண்ணுகின்ற வர்கள் என்கின்ற தம் அன்றாடக் கடமைகளையும் சொல்லிக்கொண்டு வந்ததாக ஆறாவது பாசுரத்தில் அருளிச் செய்யப்பெறுகின்றது. எங்தைதங் தைதந்தை தந்தைதம் & * : * * o to:- ெ
பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/59
தோற்றம்