பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மனிதனைத் தின்ற எழுத்துக்கள்! "6πωg எழுதினாலும் அதை நாலு பேர் பாராட்டவாவது வேண்டும்! அல்லது திட்டவாவது வேண்டும்; இரண்டும் இல்லையென்றால் எழுதுவதை விட எழுதாமல் இருப்பது நன்று' அமரர் கல்கி அவர்கள் விந்தனுக்கு வழங்கிய அறிவுரை இது. இந்தக் கருத்தை இங்கே எடுத்துக் காட்டுவதின் நோக்கம் விந்தன் எழுதி எழுதியே பாராட்டுகளை திட்டுகளை அதிகம் பெற்றவர். திட்டியவர்கள் யார்? ஏழை எளியவர்களைப் பற்றி எழுதியபோது பணக்காரர்கள் திட்டினார்கள் உழைப்பவர்களின் உண்மையான கஷ்டங்களைப் பற்றி எழுதியபோது முதலாளிகள் திட்டினார்கள், மனித நேயத்தைப் பற்றி எழுதியபோது மனித நேயமற்றவர்கள் திட்டினார்கள், அரசியல் தில்லுமுல்லுகளைப் பற்றி எழுதியபோது அரசியல்வாதிகள் திட்டினார்கள் இவ்வாறு நியாயங்களை நிலைநாட்ட எழுதியபோது அநியாயக்காரர்கள் ஆர்ப்பரித்தார்கள். ஆனால் விந்தன் எதற்கும் அஞ்சாமல் தம் கருத்தை எடுத்துச் சொன்னார். அதன் பொருட்டே எழுதி எழுதியே துன்பத் துயரங்களை அனுபவித்தார். இறுதி காலத்தில் விந்தன் தம் ஆசைகளை ஆதங்கங்களை வெளிப்படையாகச் சொன்னார்: “என் வாழ்க்கையில் 1946 - ஆம் ஆண்டை நான் சிறப்பான ஆண்டு என்று சொல்லவேண்டும். அந்த ஆண்டில்தான் தமிழ்நாடு அரசினர் முதன் முதலாக அளிக்க முன் வந்த சிறுகதைகளுக்கான பரிசை நான் முதன் முதலாகப் பெற்றேன். அதைத் தொடர்ந்து வெளியான 'பாலும் பாவையும் என்ற நாவல் மக்களின் பேராதரவைப் பெற்று. அந்த ஆதரவு வேறு எந்த நாவலுக்கும் இல்லாத அளவுக்கு இன்றுவரை நீடித்து நின்று வருகிறது.