பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 விந்தன் தேசிய உணர்வு மிக்க இளைஞர்கள் நடத்திய இலவச இரவு பள்ளியில் சேர்ந்து படித்தார். ஓரளவு கல்வியறிவு பெற்ற பின்னர் ஓவியம் கற்க விரும்பி சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார் அங்கு முழுமையாக ஒவியம் கற்க வசதி இல்லாததால் ஒவியத்தையும் பாதியிலேயே நிருத்தி விட்டார். மீண்டும் ஜெமினி ஸ்டுடியோவில் விளம்பரப் பிரிவில் ஒவியராகச் சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் தான் அவர் குடும்பத்தில் சூழ்ந்திருந்த அறியாமையும் வறுமையும் அவரின் ஓவிய நெஞ்சை அம்பு போல் குத்தின. பொதுவாக நம்மவர்களுக்கு ஒரு குணம் உண்டு. படைக்கும் தொழில் தரித்திரத்தின் ஊற்று என்று முகம் சுளிப்பார்கள். நம்மைச் சுற்றி ஆயிரம் தரித்திரங்கள் அன்றாடம் நம்மை அலைக்கழித்தாலும் அதற்கெல்லாம் விதியென்று வேதாந்தம் பேசுவார்கள் நம்மிடையே ஒருவன் படைக்கும் பணியில் ஆர்வம் காட்டினால் அய்யோ இது தரித்திரமான தொழிலாச்சே என முயற்சியை முளையிலே கிள்ளியெறிவார்கள். அப்படிப் பலமாக கிள்ளி கோவிந்தன் ஓவியனாகும் முயற்சியைத் தடுத்த பெருமை கோவிந்தனின் பாட்டனாருக்கே உரியது வறுமையும் அறியாமையும் மிகுந்த குடும்பத்தில் பிறந்த கோவிந்தன் தமக்கென்று ஒரு தொழிலும் அமையவில்லையே வயதோ இருபது நெருங்கிவிட்டது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சிந்தித்தபோது அவரின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்ந்தவர் கல்கி. டி.எம். இராஜாபாதர். பாரதிதாசன் பாடலை அச்சுக்கோர்த்தவர் டி.எம். இராஜாபாதர் ஒர் அச்சுத் தொழிலாளியின் மகன். இவருடைய தகப்பனார் மாணிக்கம் அக்கால அச்சுத் தொழிலாளர்கள் மத்தியில் 'குடுவை மாணிக்கம், கூத்தாடி மாணிக்கம் என்று புகழோடு இருந்தவர். 'ஆனந்த போதினி அச்சகத்தில் போர்மேனாக இருந்த மாணிக்கத்தை அமரர் வாசன் வாத்தியாரே என்று அழைக்கும் அளவுக்கு மாணிக்கத்தின் பேரில் அன்பு கொண்டவர் வாசன். அப்பாவின் செல்வாக்கினால் டாக்டர் மாசிலாமணி முதலியார் நடததிய தமிழரசு அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாக வி. கோவிந்தனைச் சேர்த்து விட்டார் இராஜாபாதர். கோவிந்தனும் இராஜாபாதரும் நண்பர்களாவதற்குக் காரணமாக இருந்தவை இரண்டு பேரும புளியந்தோப்பில் ஒரே தெருவில்