பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கைப் பாதையிலே 13 விகடன் அச்சகத்தில் கோவிந்தனின் பழைய நண்பர்களான இராஜாபாதர், ராம்லால், சிவலிங்கம் போன்றவர்களோடு வாத்தியார் மாணிக்கமும் இருந்தார் அப்போது விகடன் ஃபோர்மேனாக இருந்தவர் தட்சணாமூர்த்தி தேசபக்தி மிக்க காங்கிரஸ்காரர். கோவிந்தன் மேல் மிகுந்த அன்புடையவர் திருமணம் ஆனது விகடன் அச்சகத்தில் சேர்ந்த பிறகே எழுத ஆரம்பித்தார் கோவிந்தன் பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதி அனுப்பினார் அக் காலத்து பத்திரிகைகள் மேட் ஆர்டர் கதைகளைப் பிரசுரித்துக் கொண்டிருந்ததால், அச்சுத் தொழிலாளியின் கதைகளை பிரசுரிக்க அச்சம் கொண்ட போதிலும், அக் காலத்திலேயே சுதேசமித்திரன் பத்திரிகைக்கு 'விஷயதானம் செய்து வந்தவர் கோவிந்தன் தம் கதைகளை பத்திரிகைகள் பிரசுரிக்காததால் வருத்தம் அடைந்தவர் விகடன் இதழில் பிரதான அம்சமாக இருந்த பகுத்தறிவுப் போட்டியில் மறைமுகமாகக் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றதும் உண்டு. இளமையிலே வாழ்க்கையின் சுவையறியாத கோவிந்தன் ஆடம்பரத்தில் பற்றின்றி எளிய வாழ்க்கை வாழ்ந்து கடுமையாக உழைத்ததால் கையில் காசு புரண்டது மகன் கையில் காசு புரள்வதைக் கண்ட பெற்றோர்கள் கல்யாணப் பேச்சுப் பேச ஆரம்பித்தார்கள். அந்தப் பேச்சு கோவிந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கோவிந்தன் திருமணத்தைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார் இந்தச் சமூகத்தில் தனி மனிதன் சுயமரியாதையோடு வாழ்வதற்கு எத்தனைத் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது? இந்த லட்சணத்தில் துணையோடு வாழ்ந்தால் என்னென்ன கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேருமோ, எப்படி யெல்லாம் வாழ்க்கை இருக்குமோ என்று அஞ்சினார் அதனாலேயே திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க மறுத்தார் எனினும் பெற்றோர்கள் மேலும் மேலும் வற்புறுத்தியதால் 30 04 1939 அன்று நீலாவதி என்னும் பெண்மணியை மணந்தார் புதிதாக வாழ்க்கையை ஏற்றவர் தனக்கு ஒரு நிரந்தரமான தொழிலும் வருவாயும் வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது ஒரு காலகட்டத்தில் புளியந்தோப்பு பகுதியில் 'ராயல் ஒட்டல்' என்னும் பெயரில் மிலிட்டரி ஓட்டல் ஒன்றைத் தொடங்கித் தன்னிடமுள்ள பொன்னான பொருள்களை யெல்லாம் விற்று மூலதனமாக்கினார்