பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18 விந்தன் வாழ்க்கையில் பல போராட்டங்களைக் கண்டு முன்னேறியவரான கல்கி அப்போது இலக்கிய உலகில் தம் போராட்டத்தைத் துவங்கியிருந்ததால் வசந்தனின் போராட்டத்தைக் கண்டு அச்சம் கொள்ளாமல் அதன் பின்னணியைப் புரிந்து கொண்டு விந்தனுக்குத் தனியறையை ஒதுக்கினார். விந்தன் தனிமைப்பட்ட போதும் வசந்தனின் நண்பர்கள் சும்மாயிராமல் தம் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தனர். 'சார் அவர் பீடி குடிக்கிறார், முரட்டுத்தனமாகப் பேசுகிறார்' என்றெல்லாம் கோள் சொன்னார்கள். இத்தனைக்கும் விந்தன் தம் பக்கத்தில் இருந்த கழிவறையைப் பயன்படுத்தாமல் தொழிலாளிகளுக்கென்று பொதுவாக இருந்த கழிவறையைத்தான் பயன்படுத்தினார். இவையெல்லாம் கவனித்து வந்த கல்கி கொஞ்சமும் ஆத்திரப்படாமல் அமைதியாக, 'அவர் ரொம்பவும் நல்லா கதை எழுதுறாரே!' என்று சொல்லி பொறாமையால் பொங்கிக் கொண்டிருந்த தீயைப் பொக்கென்று அணைத்தார். சாதியின் பேராலும் பணத்தின் பேராலும் சமத்துவம் இழந்து சீர்கெட்டுப் போயிருந்த சமூகத்தைக் கண்டு கொதித்துக் கொண்டிருந்த விந்தன் அந்தத் தீமைகள் தமக்கு எதிராகவே பேயாட்டம் ஆடுவதைக் கண்டு ஆசிரியர் கல்கி போல் கொஞ்சமும் ஆத்திரப்படாமல் அமைதியாக அவர்களிடமிருந்து தனித்து நின்று, எழுதுவதும் சிந்திப்பதுமே தம் இலட்சியமென எண்ணிச் சிறந்த இலக்கியங்களைப் படைத்து இலக்கிய உலகில் முன்னணியில் நின்ற போது காழ்ப்புகளும் வர்க்க பேதங்களும் அழிந்து அடையாளம் தெரியாமல் போய்விட்டன. விந்தனுக்கு ஆசிரியர் குழுவில் இருந்த தொடர்பைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்த பேராசிரியர்கல்கி, விந்தன் பேரில் தனிக் கவனம் செலுத்தலானார். சில மாதங்களாக விந்தன் கதைகள் கல்கியில் வெளிவராததைக் கண்ட கல்கி, 'என்னப்பா! நீ எதுவும் எழுதறதில்லே?" என்று கேட்டபோது விந்தன் மெளனமாக நின்றார். "இனிமேல் கதைகளை என்னிடமே கொடு” என்று கல்கி சொன்ன போதிலும் விந்தன் கல்கி ஆசிரியர் குழுவில் இருந்தபோது சில கதைகளை தவிர பல கதைகள் அச்சகத்துக்கு நேராக போனதுண்டு அந்த அளவுக்கு விந்தனின் சுயமரியாதைக்குச் சுய சிந்தனைக்கு மதிப்பு அளித்தவர் மாமனிதர் கல்கி இரண்டாவது திருமணம் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு முதல் மனைவி இறந்தபோது, அடுத்து இரண்டாவது கல்யாணத்தை பற்றி பேச்சு