பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வாழ்க்கைப் பாதையிலே. 21 'குழந்தை கண்ட குடியரசு ஆகிய படங்களுக்கு வசனமும் சில பாடல்களும் எழுதினார். பத்து ஆண்டு சினிமா வாழ்க்கையில் விந்தன் கண்ட பலன்? குடியிருக்க ஒரு மனை வாங்கியதுதான். புத்தகப் பூங்கா 'மனிதன் மறைந்தவுடன் விந்தன் சோர்ந்து போனார். அப்போது அவருடைய நண்பர்கள் விந்தன் எழுதிய சிறு கதைகள் தொடர்கதைகள் ஆகியவைகளை நூல்களாக வெளியிட்டார்கள். கையில் கொஞ்சம் பணம் புரண்டது. 'புத்தகப் பூங்கா என்ற பதிப்பகத்தை ஆரம்பித்தார். சாண்டில்யன், இளங்கோவன், சு.நா.சுப்பிரமணியம், ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்துகளை வெளியிட்டார். புத்தகப் பூங்காவின் முதல் வெளியிடு 'சாவே வா' இளங்கோவன் எழுதியது. இந்தப் புத்தகம் வெளி வந்தவுடன் எல்லோரும் விந்தனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். முற்போக்குச் சிந்தனையாளரான விந்தன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஜெயகாந்தனின் கதைகளைத் தொகுத்து ஒரு பிடி சோறு என்ற பெயரில் வெளியிட்டார். அந்தப் புத்தகம்தான் ஆனந்த விகடனுக்கு ஜெயகாந்தனை அடையாளம் காட்டியது. அந்த வகையில் 'புத்தகப் பூங்காவின் சாதனை இன்றும் நினைக்கப்படுகிறது. தினமணி கதிர் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார் வாழ்க்கையில் தமக்கென்று சொந்தமாக ஒரு தொழிலை அமைத்துக் கொள்ள முயன்று தோல்வி கண்டவர், எட்டு குழந்தைகள் உடைய தன் குடும்பத்தைக் காப்பாற்றப் பல போராட்டங்களை நடத்தி தினம் தினம் செத்துச் செத்துப் பிழைத்தவர், கடைசியில் 'தினமணி கதிர் ஆசிரியர் குழு'வில் சேர்ந்தார். கதிரில் பல தொடர்களை எழுதினார் விந்தன். அவற்றில் ஒ மனிதா, பாட்டில் பாரதம், எம்.கே.டி. பாகவதர் கதை, எம்.ஆர்.ராதா சிறைச்சாலை சிந்தனைகள் ஆகும். விந்தனின் நண்பர்கள் அவருக்கு மணிவிழாக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பில் 30.06.1975 அன்று மரணமடைந்தார். மணிவிழாக் காணவிருந்த நேரத்தில் மனிதர் மண்டையைப் போட்டு விட்டார் என்று நண்பர்கள் ஆதங்கப்பட்டார்கள்.