பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24 விந்தன் இப்படிக் கூலி கொடுக்கும் போதெல்லாம் செட்டியார் தினசரி நம் வீட்டு வேலை ஏதாவது ஒன்றைச் சின்னசாமிக்கு இடுவது வழக்கம் இந்த வேலைக்குக் கூலி கிடையாது கூலி கொடுக்கும் வேலைக்கு இவையெல்லாம் கொசுறு வேலைகள் சின்னசாமிக்குச் செட்டியார் இப்படி எத்தனையே கொடுமைகளை கொடுத்தபோதிலும் அவன் அவர் முன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியதில்லை. இதைக் கண்ட டாக்டர் மு. வரதராசன் கூறுகிறார் (ஒரே உரிமை முன்னுரை) 'விந்தன் எய்யும் சொல்லம்புகள் குறி தவறாமல் பாய்கின்றன சமூகத்தை அவர் சிற்சில இடங்களில்தான் நேராகத் தாக்குகிறார். பல இடங்களில் அவர் அம்பு தொடுப்பதே இல்லை இன்றிருக்கும் நிலைமையை எடுத்துக் காட்டி பேசாமல் கதை சொல்லுகிறார். அவர் படைக்கும் பாத்திரங்கள் பெரும்பாலும் அப்பாவிகளே அவர்களுக்குச் சமூகத்தின்மேல் வயிற்றெரிச்சல் தோன்றுவதேயில்லை ஆனால் நமக்கு மட்டும் வயிற்றெரிச்சல் தோன்றுகிறது; ஆத்திரம் பொங்குகிறது!” 'விந்தன் நோக்கம் என்ன என்பதை அவருடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்திலிருந்தும் இலக்கிய நோக்கிலிருந்தும் நாம் கண்டு கொள்ள முடிகிறது வாழ்வின் கசப்பான அனுபவங்களை முழுவதுமாகப் பெற்றவர் என்ற காரணத்தினால் அவர் வாழ்வு நோக்கு என்பது மிகத் தெளிவாக உருவாகியுள்ளது அவர் சாதாரண மனிதனுக்காக இலக்கியம் படைக்க புகுந்தவர். இவர் அடிப்படையில் உலக இயக்கங்களை மிகப் பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் காணும் மனப்போக்கு அவரிடம் உள்ளது உழைப்பவனுக்கும் வீணில் உண்டு களித்திருப்பவனுக்குமான போராட்ட உலகைக் காண்கிறார் விந்தன் அவர் கூறுகிறார்: ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் நம் உழைப்புக்கேற்ற மதிப்பு - அந்த மதிப்பைப் பெறுவதற்குத்தான் இன்று கடவுளுடன் போராடுகிறோம்; மதத்துடன் நாம் போராடுகிறோம், நாம் கலையுடன் போராடுகிறோம் இந்தக் கடுமையானப் போராட்டத்தில் நாம் வீழ்ந்தாலும் சரி, நம்முடைய சந்ததியாவது வாழவேண்டும். "(எஸ் தோதாத்ரி எம்.ஏ தாமரை 1978) சோற்றுக்காக நாயுடன் போராடும் சோலையப்பனுக்கு ஒரு ரொட்டிக் கடை வைத்துக் கொடுத்து அவன் பிழைப்புக்கு வழி காட்டுகிறார் ஒரு பொதுநலவாதி கிராமத்தில் தீண்டாமை எவ்வளவு தீவிரமாகச் செயல்படுகிறது என்பதை உணர்ந்து பட்டணத்திலிருந்து பொதுநலவாதியை அழைத்து