பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

'பாலும் பாவையும் என்ற நாவலில் பெண் கெட்டு விட்டாள். பாலும் திரிந்து விட்டது, எனவே 'பாலும் பாவையும் ஒன்று என்று எண்ணினார் காலம் காலமாக இருந்து வரும் தமிழ்ப் பண்பாட்டில் - மரபில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவர் விந்தன் என்பது தெரிகிறது 'தாம்பத்ய வாழ்க்கையில் மனித வாழ்க்கையைவிட மணிப்புறாக்கள் எவ்வளவோ மேலானவையாகத் தோன்றுகின்றன. அவை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏகபத்தினி விரதத்தைக் கைவிடுவது இல்லையாம் ஆண் புறா, பெண் புறாவை விட்டுப் பிரிந்தால் ஊண்உறக்கமின்றி உயிரை விட்டு விடுமாம், பெண் புறா ஆண் புறாவை விட்டுப் பிரிந்தால் உயிர் போகும் வரை உண்ணாவிரதம் இருக்குமாம் நாமும் அவற்றை பின்பற்றுவது சாத்தியமா? அது எப்படி சாத்தியமாகும் (மறுமணம்) “இவன் என்னமோ சமூகத்தைச் சீர்திருத்திவிடப் போகிறானாம்; விதவைகளின் துயரத்தைத் தீர்த்துவிடப் போகிறானாம் அதற்காக இரண்டாம் தாரம் கல்யாணம் செய்து கொள்வதென்றால் இவன் எவளாவது ஒரு விதவையைத்தான் கல்யாணம் செய்து கொள்வானாம் இன்னும் என்னவெல்லாமோ சொல்லுகிறான் அவற்றையெல்லாம் வெளியில் சொல்லுவதென்றால் எனக்கு வெட்கமாகயிருக்கிறது" மனைவியை இழந்த இரண்டு குழந்தைகளின் தந்தையின் மனநிலை இது 'எந்த விதவை இவரைக் கல்யாணம் செய்து கொள்வதற்குக் காத்திருக்கிறாளாம்? இந்த புருஷர்கள்தான் விதவா விவாகம், விதவா விவாகம் என்று எப்போது பார்த்தாலும் அடித்துக் கொள்கிறார்கள் எந்தப் பெண்ணாவது அப்படி சொல்கிறாளா? பைத்தியம்தான் கணவனை இழந்த ஒரு பெண்ணின் மனநிலை இது “வணக்கம், மறுமணம் செய்து கொண்டால் விதவைகளின் துயரம் தீர்ந்துவிடும் என்று சிலர் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா? என்னால் அதை நம்பமுடியவில்லை அதற்காக வழி வழியாக வாழ்ந்து வரும் காதலையும் கொன்று விடவும் நான் விரும்பவில்லை எனவே என்னைப் பொறுத்தவரையில் நான் பூசிக்கொண்ட மஞ்சளும் வைத்துக் கொண்ட குங்குமத் திலகமும், சூடிக்கொண்ட மலரும், அணிந்த வளையலும் அவருக்காகத்தான் வேறொருவருக்காக அவற்றை மீண்டும் அணிந்து கொள்வது என்பது இந்த ஜென்மத்தில் முடியாத காரியம் - மன்னிக்கவும்"