பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறு கதைகள 29 'பெண்கள் சபலச் சித்தம் உள்ளவர்கள் என்று சொன்ன மேதாவிகளின் மேதைமையை எண்ணி சிரித்தான் வைர நெஞ்சுடன் அவள் வாழும் முறைமையை எண்ணி எண்ணி வியந்தான் அப்போது காற்றில் வந்த கீதம். கற்புநிலை என்று சொல்லவந்தார் - இரு கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம் என்று இசைத்தது மறுமணம் அல்ல திருமணம் ஒருமனமே திருமணம் என்று முடிவுக்கு வந்தான் (மறுமணம்) இதற்குமேல் இந்தக் கதையைப் பற்றி என்ன சொல்ல விருக்கிறது? இப்படி வேண்டுமானால் சொல்லலாம் இது ஒரு மனவியல் ரீதியான கதை. முதல் திருமணத்தில் உண்டான காதல். கற்பனைகள் எதிர்பார்ப்புகள் எல்லாம் மனத்தில் பதிந்துவிட்ட ஓவியங்கள் அந்த அழியாத ஒவியங்களை அழிக்கலாமா? - மேலும் வாழ்வொழுங்கில் விந்தன் காந்தியவாதி: காந்தியார் பெண் முன்னேற்றத்தை வற்புறுத்தினாலும், மறுமணத்தை ஏற்கவில்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் 'மனிதன்' எவ்வளவு கம்பீரமான சொல்! ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் எழுத்தில் மரியாதை உள்ளவர் விந்தன். அதன் பொருட்டே அவர் படைக்கும் படைப்புகளில் மனிதனை மனித நேயத்தை வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். காணுமிடம் எங்கும் அவன் கை வண்ணத்தைக் கண்டு வியந்து போற்றுபவர் நானில மேன்மையெல்லாம் மானிடமேன்மைதானே. மயிலைக் காளைகள் இரண்டு கோமாரி நோயினால் இறந்து போனதைக் கேட்டு 'ஆ' என்று அலறுகிறார் மாணிக்கம் பிள்ளை அச் சமயத்தில் அவர் மனைவி 'சேரிக்கு ஆள் அனுப்பட்டுமா?’ என்று சொல்லிக் கொண்டே வருகிறார்கள். “சரிதான் போடி ஆள் விடுகிறாளாம் ஆள்' என்றார் எரிச்சலுடன் என்னங்க முப்பது வருஷம் வேலை பார்த்த முனுசாமியே போயிட்டான் மாடு போனா போகுது' 'மனுஷன் முதல் இல்லாம வருவான்; மாடு வருமா?" என்றார் (மாடும் மனிதனும்) முதல் இல்லாமல் கிடைக்கும் மலிவான பொருளாகப் பணக்காரர்களால் மாற்றப்பட்ட மனிதன், எவ்வளவு மகத்தான சக்தி படைத்தவன் என்பதை முதலாளித்துவம் எவ்வாறு மறைத்து விட்டது என்பதை மனக்கொதிப்புடன் சித்திரிக்கிறார் விந்தன். ஒரு மிஷின் வேலை செய்வதற்கு லாயக்கில்லாமல் போனால் அதைப் பழுது பார்க்க ஆயிரம் ஆயிரம் வேண்டுமானாலும் எந்த முதலாளியும் செலவழிக்கத் தயாராயிருக்கிறார்கள் ஆனால் வாழ்நாள்