பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறு கதைகள் 35 அவன் சம்மதம் கேட்டு கடிதம் எழுதினார் அவன் நல்ல பதிலை தந்தான் அடுத்து, 'ஜேம்ஸ் தாம்சனுக்கும் ரங்கா என்னும் மேரி ரோசிக்கும் விவாகம் சிறப்பாக நடைபெற்றது" இந்தச் செய்தியைக் கேட்ட உறவினாகள் அவன் இறந்து விட்டதாகக் கருதி புண்ணிய ஸ்நானம் செய்து கொண்டார்களாம் செத்தால் தலை முழுகத்தான் அவர்கள் இருக்கிறார்கள். பின்னர் உறவினர் எதற்கு? (உறவினர் எதற்கு?) குழந்தைக் கதைகள் எழுத்தாளர்கள் பலரும் குழந்தைகளைப் பற்றி கதைகள் எழுதியிருக்கிறார்கள் ஆனால் விந்தன் குழந்தைகளைப் பற்றி எழுதியுள்ள கதைகள் வித்தியாசமானவை, மனசை உலுக்கக் கூடியவை கல்கி சொன்னார் 'விந்தன் கதைகளைப் படித்தால் இரவில் தூக்கம் வராமல் தவிக்க நேரும்' என்று, அந்த அளவுக்கு விந்தன் கதைகள் அமைந்தன 'மவராசாக்கள்' என்னும் கதையில் வரும் ஓர் ஏழை மரமேறும் தொழிலாளி தன் குழந்தை பசியில் அழுதபோது அதற்கு பால் கொடுக்க வழியில்லாமல் 'அபின் கொடுத்து தூங்க வைக்கிறான் அபின் அந்த குழந்தையின் உயிரைப் போக்கிவிடுகிறது ஊர் குழந்தைகளுக்கெல்லாம் அட்சராப்பியாசம் செய்து வைத்த ஆசிரியர் தம் பிள்ளைக்கு ஆபீசாப்பியாசம் செய்து வைக்கிறாா சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் கடையில் இருந்தபடியே கண்டு காலம் கழித்தவர் மாணிக்கம் அதனாலே அவர் முகத்தைக் காணும் பாக்கியம் அவருடைய மகனுக்கு கிடைக்கவில்லை அதனால் அப்பாவைக் காணத் துடித்துக் கொண்டிருந்தவன் ஒருநாள் காலையில் தாடி மீசையுடன் விகாரமான முகத்துடன் ஒர் உருவம் அவனைக் கட்டிப்பிடிக்கிறபோது, அவன் அலறுகிறான் அப்போது வந்த அவன் அம்மா இவர்தான் உன் அப்பா' என்று சொன்னபோது குழந்தை குதுகலம் அடைகிறது. (குழந்தையின் குதூகலம்) என்ற கதையில் சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு மனிதனை எவ்வளவு கொடியவனாக தான் பெற்ற செல்வத்தை அபின் கொடுத்து கொல்லத் தூண்டுகிறது என்பதை மிகவும துணிச்சலுடன் சித்திரித்து காட்டுகிறார் விந்தன் ஏழை எளியவர்களின் துன்பத்துயரங்களை நேரில் கண்டு அனுபவித்தவர் என்பதற்குச் சாட்சியமாக இக் கதை அமைந்துள்ளது 'சமுதாயத்தையும் அதன் உள்ளோட்டத்தையும் உணராமல் கதைகள் படித்து கதைகள் எழுதுவோர் பலர், சமூகத்தைக் கண்டும்