பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறு கதைகள் 37 'பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும், சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டத்தைப பறறியும் என்னதான் கண்ணிரில் பேனாவைத் தோயத்துக் கொண்டு எழுதினாலும், அந்தக் கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை இலடசனங்கள் எல்லாம் இருக்கலாம் உள்ளத்தை ஊடுருவி வதைக்கும் படியான இதயம் ஒன்றிய ஈடுபாடு இருப்பதில்லை (கல்கி முன்னுரை) அன்றாடக் கூலியாக ஆறணா பெற்ற அச்சுத் தொழிலாளி விந்தன், தான் பெற்ற அனுபவத்தை, முதலாளித்துவக் கொடுமையை வர்க்கவுணர் வோடு சித்திரிக்கிறார் சுயநலவாதிகள் பொதுநலவாதியான விந்தன் சுயநலவாதிகள் சிலரைப் பற்றி சுறுக்கென்று மனத்தில் தைக்கும்படியாக எழுதியுள்ளார் 'அரசியலை நிர்வகிக்கும் ஒவ்வொரு அதிகாரிக்கும் மூன்று வித மனப்பான்மைகள் இருக்கின்றன முதலாவது அவனுடைய சொந்த மனப்பான்மை இது சுயநலத்தை நாடுகிறது இரண்டாவது ஆள்கின்ற மனப்பான்மை இது சர்க்கார் நலத்தை நாடுகிறது மூன்றாவதாகத்தான் மக்களுடைய மனப்பான்மை இருக்கிறது, இது மக்களுடைய நன்மையை நாடுகிறது' என்ற அறிஞர் ரூசோவின் வாசகத்தைப் படித்தவன் அடேய்! அதிகப் பிரசங்கி! நான் யாருக்குப் பிரதிநிதி என்றா கேட்கிறாய்? சொல்கிறேன் கேட்டுக் கொள் நான் எனக்குப் பிரதிநிதி, என் மனைவிக்கும் பிரதிநிதி, என் மக்களுக்கு பிரதிநிதி, என் வீட்டுக்குப் பிரதிநிதி, உனக்கில்லை பிரதிநிதி இல்லை, உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதி இல்லை, போ!' என்று கத்தினார் ' (யாருக்குப் பிரதிநிதி) கள்ளமார்க்கெட் வியாபாரம் செய்யும் கறார் கருப்பையாவிடம் மனசாட்சி உள்ள மனிதன் எவனும் வேலை செய்யமாட்டான் என்பதற்கு சாமிக்கண்ணு நல்ல சாட்சி கறார் கருப்பையாவின் திருவிளையாடல் களைத் - திருட்டுத்தனங்களைச் சித்திரிக்கும் (வேதாந்தம்) 'நண்பா சாப்பிட்டு நான்கு நாட்களாகிவிட்டன. இன்றும் கூட ஒரு பருக்கைகூட கிடைக்கவில்லை' என்றான் பெருமூச்சுடன் 'கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது, கட்டத் துணியில்லை வாங்கக் காசில்லை' "கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது' 'படுக்கப் பாயில்லை இருக்க நமக்கென்று ஒரு இடமில்லை' "கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது'