பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 விந்தன் நிகழ் காலத்தை மறந்து எதிர்காலததை நம்பி வாழும் ஏழைகள் கண்ணிா கதை நாளை நம்முடையது 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதே எங்கள் ஏகாம்பரத்தின் கொள்கை அந்தக் கொள்கையில் அவர் எந்த அளவுக்கு நியாய தர்மத்தோடு நடந்து கொண்டார் என்பதை சித்திரிப்பதே. (எங்கள் ஏகாம்பரம்) “சமூகம் என்பது நாலு பேர்' என்பார்கள் அந்த நாலுபேரின் மனநிலையை சரியான சமூகக் கண்ணோட்டத்துடன் சித்தரிப்பதே மேலே கண்ட கதைகள் உருவம் உளளடககம் என்று சொல்லிக் கொண்டு உப்பு சப்பு இல்லாமல வெறும் நிகழ்ச்சித் தொகுப்புகளே சிறந்த சிறுகதைகளாகும் போது வாழ்க்கையில் போலிகளை - பொய்யர்களைப் புறக்கணித்து விட்டு, உணமைகளை - மக்களின் நன்மைகளைத் தேடி இலக்கியம் படைப்பதே தமது இலட்சியமாகக் கொண்ட விந்தன் ஒரு சுயநல அரசியல்வாதியின் சுயரூபத்தை நிசத்தன்மையுடன் சித்திரிக்கிறார் அந்தச் சித்திரிப்பில் உருவம், உள்ளடக்கம் அனைத்தும் இணைந்து விடுகின்றன 'அடடே, நமக்கு மனசாட்சி வேற இருக்கிறதா? இந்த விஷயம் முதலிலேயே எனக்குத் தெரிந்திருந்தால் உம்மை வேலையிலேயே வைத்திருக்க மாட்டேன்' 'எனக்கும் தங்களுக்கும் மனசாட்சி இல்லை என்ற விஷயம் முதலிலேயே தெரிந்திருந்தால் உம்மிடம் வேலையிலேயே சேர்ந்திருக்க மாடடேன்' இந்த உரையாடலின் உச்சகட்டம் சாதாரண சாமிக்கண்ணு 'சத்யகீர்த்தி சாமிக்கண்ணு' என்ற பெயருடன் வேலை நீக்கம் செய்யப்பட்டார் 'மனசாட்சி உள்ளவனே மனிதன்' என்பார்கள் ஆனால் கறார் கருப்பையா மனசாட்சி இல்லாத மனிதர், அரசாங்கத்தை, அப்பாவி மக்களை வேரடி மண்ணோடி சுரண்டும் ஒரு கொள்ளைக்காரன் அவனுடைய கதையை ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளது உள்ளபடி சித்திரிக்கிறார் மனசாட்சி உள்ளவர் மனிதர் விந்தன் நாளை நம்முடையது' என்பது ஒரு கோழையின் குரல், இன்றே நம்முடையது ஆகவேண்டும்' என்பது ஒரு வீரனின் குரல் இன்றைய நாளை தமதாக்கிக் கொண்டிருந்த காண்ட்ராக்டர் கந்தையா சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கு கஞ்சி வார்த்தார். ஓர் ஏழைச் சிறுமி ஒருமுறை கஞ்சி வாங்கிவிட்டு மறுமுறை கஞ்சி வாங்க வந்தாள் தன் அம்மாவுக்கு அதைக்கண்ட கந்தையா சிறுமியின்