பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறு கதைகள் 43 ஆனாலும் என்ன செய்வது என்று தெரியாமல் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் மனவேதனையுடன் வேலப்பன் வெளியேறிபோது காற்றில் கலந்துவந்த அந்தக் கீதம் அவன் காதில் ஒலித்தது 'விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும் வீணருக்கு ழைத்துடலும் ஒயமாட்டோம்!" வாழ்க்கைச் சித்திரங்கள் தமிழில் விந்தன் நூற்றுக்கு மேற்பட்ட கதைகள் எழுதி யுள்ளார் அவற்றில் பெரும்பாலும் ஏழை எளிய பாட்டாளி வர்க்கத்தைப் பற்றி எழுதியுள்ள கதைகள்தாம் அதிகம். நடுத்தர வர்க்கத்தைப்பற்றி அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் சீரழிவுகள் பற்றியும் கதைகள் எழுதியுள்ளார்; அந்தக் கதைகளைப் பற்றி முன்னாள் 'கல்கி துணையாசிரியர் எஸ் வேங்கட்ட சுப்பிரமணியம் (எஸ் வி. எஸ்) சொல்லுவார் 'விந்தன் கதைகள் மகாகவி தாகூர் கதைகள் மாதிரி இருக்கின்றன" என்று எடுத்துக் காட்டிற்குச் சில கதைகள் 'முதல்தேதி நடுத்தரவர்க்கத்தில் ஒரு நம்பிக்கையான சொல். ஒரு மாதம் முழுவதும் கடன் வாங்குபவன் கடன்காரனுக்குச் சொல்லும் ஒரே பதில் முதல் தேதி தருகிறேன்' என்பதுதான் குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வாக அமைவது முதல்தேதி தான். பிரசவத்துக்கு வந்திருக்கும் தங்கையை ஊருக்கு அனுப்புவது முதல், பிள்ளைகள் கேட்கும் நாடகம், சினிமா முதற்கொண்டு அனைத்துக்கும் ஒரே பதில் முதல்தேதிதான் சிக்கனமாக குடும்பம் நடத்த வேண்டும் என்பது மனைவியின் ஆசை 'பார்க்கப்போனால் நம்மைக் காட்டிலும் வாழ்க்கையில் குறைந்த அளவு தேவையுடன் திருப்தியடைபவர்கள் வேறு யாருமே இருக்கமாட்டார்கள்' 'ஏன் இல்லை? எத்தனையோ பேர் இருக்கிறார்கள் முனியன், மூக்கன், தொப்பை, சப்பை என்று இல்லையா?" 'அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? பிறர் வாழ்வதற்காக நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது பிரெஞ்சு அறிஞன் ஒருவன் ஜனங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறான் மேல் வகுப்பு, கீழ் வகுப்பு, மத்திய வகுப்பு என்று அவன் பிரித்திருக்கிறான்