பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 விந்தன் மேல் வகுப்பினர் சுதந்திரத்தை விலைக்கு வாங்குகிறார்கள் கீழ் வகுப்பினர் சுதந்திரத்தை விலைக்கு விற்கிறார்கள் என்று அவன் சொல்கிறான் இந்த இரு வகுப்பினர்களுக்கும் இடையில் இரண்டும் கெட்டானாக இருந்து கொண்டு அவதிப்படுபவர்கள்தாம் நம்மைப் போன்றவர்கள் நம்முடைய சூழ்நிலை வேறு, அவர்களுடைய சூழ்நிலை வேறு இவையனைத்தையும் கூட்டிக் குழப்பி ஒன்று சேர்க்க முயல்கிறார்கள் அரசியல்வாதிகள் ' அவன் எதிர்பார்த்த முதல் தேதியும் வந்தது வாங்கிய சம்பளத்தைக் கடன்காரர்களுக்குக் கொடுத்து விட்டு மிச்சம் இருந்த ஒரு ரூபாயை - முழுசாகக் கொடுத்தான் இந்த மாதக் குடும்பச் செலவு என்று மனைவியிடம் பின்னர் பிள்ளைகள் சர்க்கஸ், சாக்லெட், சைக்கிள் என்றார்கள் அனைவருக்கும் ஒரே பதில், முதல் தேதி இந்த முதல் தேதிக்கு முடிவே கிடையாதா? அவர்கள் வாழ்வு முடியும் வரையில் அதற்கு முடிவே கிடையாது (முதல் தேதி) நினைத்தது நடக்கவில்லை, நினைக்காதது நடந்து விட்டது அதுதான் மனிதனை மீறிய செயல் நாளை வரும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு குறுக்கே நிற்கும் நோயாளியான சம்மந்தி என்று அவரை சபித்துக் கொண்டிருந்தாள் சம்மந்தியம்மாள் அவளின் சபித்தலைக் கேட்டு மனமுடைந்து சம்மந்தி தற்கொலை முயற்சியில்ாடுபடுகிறார் கையில் இருக்கும் வைரமோதிரத்தின் உதவியை நாடுகிறார் மின்சாரத்தின் துணையைத் தேடுகிறார் கடைசியில் அவரின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை எதிர்பாராமல் சம்மந்தி அம்மாள் மண்டையைப் போட்டு விடுகிறாள் (ாசன் விட்டவழி) பொருளாதார ஏற்றத்தாழ்விற்கும், சாதி சமத்துவத்துக்கும் கலப்பு மணம் ஏற்றது என்று கருதும் விந்தன், எந்த நிலையிலும் மறுமணத்தை ஏற்றுக் கொள்வதேயில்லை ஏற்கெனவே 'மறுமணம் என்ற கதையில் இந்தக் கருத்தைத் தவிர்த்தவர், மேலும் மறுபடியும் வணக்கத்துக் குரியவள் என்றும் கதைகளின் மறுமணம் நிகழ்வதற்கு வாய்ப்புகள் பல இருந்த போதிலும் அதை முற்றாக மறுக்கிறார் ஒவ்வொரு குடும்பத்திலும் மருமகள் என்பவள் நேற்று வந்தவள்தான் இந்த நடப்பியல் உண்மையைப் புரிந்துக் கொண்டனர் இரு வீட்டு மருமகள்கள் பின்னர் பிரச்னை தீர்ந்தது. மகிழ்ச்சி பொங்கியது (நேற்று வந்தவள்) கதைகளை எதைப்பற்றி வேண்டுமானாலும் எப்படி வேண்டு மானாலும் எழுதலாம் ஆனால் சொல்லும் விஷயத்தை சுவையாகச்