பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறு கதைகள 45 சொல்லவேண்டும் என்பதே சிலரின் கருத்து ஆனால் விந்தன், கதைகள் வாழும் மக்களைப் பற்றி எழுதவேண்டும், அன்றாடம் அவர்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களைப் பற்றி எழுதவேண்டும், மொத்தத்தில் மனிதனின் வாழ்க்கைப போராட்டங்களைப் பற்றி எழுதிப் படிப்பவர்கள் மனத்தில் பரிவு ஏற்படும்படி எழுதவேண்டும் என்னும் கொள்கையுடையவர் அத்தகைய நோக்குடன்தான் இந்த ஐந்து கதைகளையும் எழுதியுள்ளார் ஒவ்வொரு கதையிலும் நடுத்தர வர்க்கத்தின் நடப்பியல் வாழ்க்கையை அவருக்கே உரிய தன்மையுடன் விவரிக்கிறார் கீழ்தட்டு மக்களின் போராட்டங்கள் கோபங்கள் ஆகியவைகளை அறிந்துள்ளது போலவே, நடுத்தர வர்க்கத்தின் நியாயமான கோரிக்கைகளைத் திறம்பட வலியுறுத்துகிறார் முற்போக்கு சிந்தனை யாளரான விந்தன் மறுமணத்தை ஏனோ வெறுக்கிறார் அந்தக் கருத்தைத் தன் கதைகளில் வெற்றி பெறுவதற்கு மாறாக தோல்வி அடையவே செய்கிறார் அவரின் இந்த ஒரு கருத்தில் எனக்கு உடன்பாடில்லை முஸ்லிம் சமுதாயத்தைப்பற்றி இரண்டு கதைகள் எழுதியுள்ளார் விந்தன், அவை தங்க வளையல் அன்பும் அதிகாரமும் ஆகியவை சரித்திர, புராண கதை மாந்தர்களைப் பற்றி கதைகள் எழத விரும்பாத விந்தன், கற்பனையில் எழுதிய முஸ்லிம் அரசரின் கதைதான் 'அன்பும் அதிகாரமும்' 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆனால் அன்பை அதிகாரத்தால் அடையப் பார்க்கிறான் அரசன் அன்பை விலை பேசுகிறான் விற்பதற்கும், வாங்குவதற்கும் யாருக்கும் உரிமையில்லை என்பதை அறிந்து அரசன் ஆத்திரப்படுகிறான். பாதுஷா முல்லாவின் பிறந்த நாள் அரசவை கூடுகிறது அரசப் பிரதானியர்கள் அனைவரும் வருகிறார்கள் கடைசியில் கவி இசா வருகிறான், ஒரு மான் குட்டியுடன், அந்த மான் குட்டியின் மேல் ஆசைபடுகிறாள் ராணி ஜிஜியா. தன் விருப்பத்தை அரசனிடம் சொல்லுகிறாள் அரசன் ராணியின் விருப்பத்தை கவி இசாவிடம் தெரிவிக்கிறான் "ராணி மான் குட்டி யிடம் மனத்தைப் பறிகொடுத்தாள் சரி மான் குட்டி ராணியிடம் மனத்தைப் பறி கொடுத்ததா?' பின்னர், அன்பும் அதிகாரத்துக்கும் விவாதம் நீடிக்கிறது. கடைசியில் கவி சிறையிலும், மான்குட்டி அரசு உத்தியானவனத்திலும் கவியைத் துறந்து உயிர் வாழ முடியாத மான் உணவை உறக்கத்தை, மறந்து ஒரு நாள் உயிரை விட்டது அதை அறிந்த கவியும் தானும் பறந்து செல்வதாகக் கூறி பறந்து சென்றான்