பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறு கதைகள் 47 சொன்னதைக் கேட்டவுடன் மீண்டும் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் இக் கதையில் நகைச்சுவைக்குச் சில எடுத்துக்காட்டு: 'இத்தனைக்கும் நான் அப்படியொன்றும் கேட்டு விடவில்லை ஆனானப்பட்ட கம்பனே தன்னைத்தானே கவிஞன் என்று அழைத்துக் கொள்ளாதபோது நீங்கள் ஏன் உங்களை நீங்களே கவிஞன் என்று அழைத்துக் கொள்கிறீர்கள்? என்று தான் கேட்டேன் அவ்வளவுதான் பாலர் பாடம் படித்திருக்கிறீரா? இல்லை, நீர் பாலர் பாடமாவது படித்திருக்கிறீரா, என்று அவர் என்மேல் பாய ஆரம்பித்து விட்டார். 'அதில் என்ன தெரிய வேண்டும் உங்களுக்கு? தெரியாவிட்டால் கேளுங்கள் சொல்கிறேன் என்றேன் அடக்க ஒடுக்கமாக, "நன்று. நவிலும் 'அ' என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது? 'அணில் படம் போட்டிருக்கிறது அதற்குக் கீழே 'அணில் என்று எழுத்தில் போட்டிருக்கிறது 'நன்று 'ஆ' என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது? ஆட்டின் படம் போட்டிருக்கிறது’ 'அதற்குக் கீழே? ஆடு என்று எழுத்தில் போட்டிருக்கிறது. 'அணிலையும் ஆட்டையும் அறியாதார் அவனியில் உண்டோ? 'இல்லை' அங்ங்னம் இருந்தும் சித்திர விளக்கத்தோடு அதற்குரிய எழுத்து விளக்கமும் சேர்ந்து நிற்பது ஏற்றுக்கு? எடுத்துக்காட்டும் பொருள் பள்ளிச் சிறுவர்கள் கண்ணில் பதிவதோடு எழுத்திலும் பதியவேண்டும் என்பதற்காக இருக்கனும் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது” அம் முறையைத்தான் யாமும் கையாண்டு வருகிறோம் எனவே பிறவிக் கவிஞரே என்று முகம் மலர அகம் குளிர எம்மை விளிப்பாரைக் கண்டிலோம், கண்டிலோம் இவ்வாறு நகைச்சுவை ததும்ப நயமுடன் எழுதியுள்ளார் விந்தன் விந்தன் காட்டும் சிறுகதை உலகம் தமிழ்ச் சிறுகதை உலகில் விந்தன் காட்டும் காட்சியும் களமும் வித்தியாசமானவை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஏழை எளிய பாட்டாளி வர்க்கத்தைப் பற்றி பரிவுடனும் வர்க்கப்பாசத்தோடும் சிறுகதைகள் எழதிய எழுத்தாளர்களில் முன்னணியில் நிற்பவர்.