பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல்கள் 55 விடுதலைக்காகப் போராடிய தலைவர்களையெல்லாம் சிறையில் அடைத்துக் கதர் கட்டிய காங்கிரஸ்காரர்களே - உண்மை ஒன்று இருக்கப் பொய் பலவாறு பேசிய போலி அரசியல்வாதிகளே தியாகிகள் என்று மக்கள் நம்பிய காலமது மற்றொரு பக்கத்தில் பெரியார் ஈ.வே.ரா.வின் திராவிடர் கழகம் பிளவு பட்டு, அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகி, வெள்ளையரின் ஏகாதிபத்தியம் ஒழிக’ எல்லோரும் இந்தியர்களே! 'இந் நாட்டு மன்னர்களே! என்கிற முழக்கங்களைக் கேட்டுக் கேட்டு விரைத்துப்போன தமிழர்களின் செவியில், வடஇந்திய ஏகாதிபத்தியம் ஒழிக’ ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது!’ என்பன போன்ற தீந்தமிழ் வாசகங்கள் தமிழர்களின் செவியில் தென்றலாய்ப புகுந்து, தேனாக நெஞ்சில் இனித்துத் தமிழகத்தின் பட்டிதொட்டிகள் முதல் பட்டணங்கள் வரையில் புயல் போல் பரவி தி.மு.க.வின் முழக்கங்களும், கொள்கைப் பிரகடனுங்களுமே காங்கிரசுக்குச் சரியான எதிர்ப்பு என்னும் மயக்கம் மக்கள் மத்தியில் மேலோங்கியபோது, காங்கிரசின் முதலாளித்துவப் போக்குகளும், ஏழை எளியவர்களை அடக்கி ஒடுக்கி என்றும் அவர்களை இல்லாதவர்களாக்கிய தொழிலாளர் விரோத நடவடிக்கையும் மூடிமறைக்கப்பட்டு எங்கும் பகுத்தறிவுக் கொள்கையும் பழந்தமிழ்ப் பற்றும் வேகமாகட பரவிச கொண்டிருந்த காலமது. இருள் சூழ்ந்த இக்காலத்தில் தான் வெள்ளி முளைப்புப் போல் விந்தன் நாவல் வெளிவந்தது. வெளியிட்ட பத்திரிகையான பொன்னி' இதழ் சிறந்த தமிழ்ப் பத்திரிகையாக விளங்கிய போதிலும், அதனோடு தொடர்பு கொண்டவர்கள், கருத்து வழங்கியவர்கள் தி.மு க சார்ந்த எழுத்தாளர்களாக இருந்ததாலும், கதையின் கருத்துகள் காங்கிரஸ் இயக்கத்திற்கு எதிர்ப்பாக உண்மையாக இருந்ததாலும், விந்தன் ஒரு தி.மு.க. சார்பு எழுத்தாளராகக் கருதப்பட்டார் அதே போன்று கதையில் சொல்லப்பட்ட பல கருத்துகள் மனிதாபிமானத்தோடு மாறுதல்களைப் படைக்கும் நோக்கத்தோடும் சொல்லப்பட்டிருப்பதால் விந்தன் ஒரு கம்யூனிஸ்ட் என்று நம்பப்பட்டார். இவ்வாறு ஒவ்வொருவரின் போக்கிற்கும், நோக்கிற்கும் ஏற்பவும், இசைவாகவும் இலக்கியம் படைத்து எல்லோருக்கும் நல்லவராக வாழவும், நண்பனாக நடிக்கவும் விந்தன் தம் எழுத்தைப் பயன்படுத்தினாரா என்று எண்ணிப் பார்ப்பதைவிட, எல்லோரும் அவர் எழுத்தைப் படித்தபோது, படித்தபின் சிந்தித்தபோது, சிந்தித்தபின் இச்சமூகத்தை நோக்கியபோது, கதையும், காட்சியும், கருத்தும் களமும் அவர்கள் கண்ட காட்சியாகவும், கொண்ட கருத்தாகவும் இருந்ததால் அதனோடு கலந்து, அதுவே அவர்களுக்குரியது என்று நம்பி அதன்பால்