பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 விந்தன் உறவும் உரிமையும் கொண்டாடி, பாசமும் பரிவும் கொண்டுப் பாராட்டினார்கள். பாலும் பாவையும் 1950-இல் 'கல்கி' இதழில் தொடராக வெளிவந்த இந்நாவல் விந்தனுக்குப் பலவிதமானப் பாராட்டுதல்களையும், பாதிப்புகளையும் உண்டாக்கி இலக்கிய உலகில் பெரியதோர் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால், வள்ளுவருக்கு ஒரு திருக்குறள், கம்பனுக்கு ஓர் இராமாயணம், இளங்கோவடிகளுக்கு ஒரு சிலப்பதிகாரம், பாரதிக்கு ஒரு பாஞ்சாலி சபதம், பாரதிதாசனுக்கு ஒரு குடும்பவிளக்கு என்று சிறப்படைந்ததுபோல், விந்தனின் எழத்தாற்றலை எக்காலத்திலும் எடுத்துச் சொல்லக் கூடிய நாவல் பாலும் பாவையும்' என்பதே தமிழ் முற்போக்கு இலக்கிய உலகின் ஒட்டு மொத்தமான கருத்தாகும். விந்தனுக்கு இவ்வளவு சிறப்புகளைச் சேர்ந்த இந் நாவல், அவருக்கு எத்தகைய பாதிப்புகளைப் பலவீனங்களை ஏற்படுத்தியது என்பதையும் இந்தத் தருணத்தில் கவனிக்கத் தக்கது. 'பாலும் பாவையும் தொடர்கதை 'கல்கி'யில் தொடராக வெளி வந்தபோது, பிறர் எழுத்தை நான் படிப்பதேயில்லை' என்று கர்வத்தோடு சொல்லிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் பலரைப் பலமுறை படிக்க வைத்துச் சொல் புதிது, சுவை புதிது, என்று சொல்ல வைத்த நாவல். இந் நாவலைப் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். அவர்தான் இந் நாவலில் வரும் 'ஒடினாள். ஓடினாள். ஒடிகொண்டேயிருந்தாள்...' என்ற வசனத்தை 'பராசக்தி' படத்தில் பயன்படுத்திக் கொண்டார். 'எந்தப் புத்தகம் ஆக்கியோனின் இரத்தத்தால் ஆக்கப்பட்டிருக் கிறதோ அந்தப் புத்தகமே எனக்கு விருப்பமானது என்றார் ஜெர்மன் தத்துவ ஞானி நீட்சே' 'ஆம் ஜெர்மன் அறிஞன் சொன்னதுபோல் பாலும் பாவையும் விந்தனது இரத்தத்தால் ஆன நூல்தான் (கலைப்பித்தன், ஆனந்தவிகடன் 1961) 'பாலும் பாவையும்' என்ற (தொடர் கதையாக வெளி வந்த) நாவலை பற்றிய குறிப்பு எதனையும் சிட்டி - சிவபாதசுந்தரம் எழுதிய 'தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் எனும் நூலில் காண முடியவில்லை.