பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல்கள் 59 "அவர்கள் நாசமாய்ப் போகட்டும்' என்று மனத்துக்குள் சபித்துக் கொண்டே நான் பலிபீடத்தில் நிற்கும் ஆடுபோல் நின்றேன் 'அதற்குப் பின் ஆசிரியர் அவர்கள் என்ன நினைத்தார்களோ, என்னமோ சரி, 'போய் வாருங்கள்!” என்று என்னை அனுப்பி விட்டார். வீட்டுக்கல்ல; காரியாலயத்துக்குத்தான். அதன் விளைவே கல்கி'யில் தொடராக வெளியாகி, உங்கள் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த 'பாலும் பாவையும் ஆகும்.' இக் கதை தொடராக வெளிவந்த போதே பிரபல நாடகக் கலைஞர்களான டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகமாகத் தயாரிக்க முனைந்து, பின்னால் அந்த முயற்சியைக் கைவிட்டனர். ஏனெனில், அக்காலத்தில் எழுத்தாளர்களுக்கு டி.கே.எஸ். சகோதரர்கள் அளித்த மதிப்பும் மரியாதையும் பெரியதாக இருந்த போதிலும, பண விஷயத்தில் அவர்கள் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் அதை விடவும் பெரியதாக இருந்ததனால், விந்தனுக்கு அவர்களோடு ஒத்துப்போக முடியவில்லை; அதனால் நாடகமும் அரங்கேறவில்லை. அதே காலத்தில் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் இக் கதையைத் திரைப்படமாக்கத் திட்டமிட்டு 'கல்கி' பத்திரிகையிலிருந்து விந்தனை விலகச் செய்து, சிவாஜி கணேசன் - பத்மினியை வைததுச் சில காட்சிகளைப் படமாக்கிய போது, ஏவி.எம். நிறுவனத்தாரின் சினிமாத் தனங்கள் விந்தனின் சுயமரியாதைக்கும், சுயசிந்தனைக்கும் பாதிக்கும்படியாக இருந்ததனால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது இந்த நிகழ்ச்சிகள் நடந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய சுய முயற்சியினால் 15.07.1964 அன்று டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் இராஜா அண்ணாமலை மன்றத்தில் பாலும் பாவையும் நாடகமாக அரங்கேறியது. பின்னர் 1967-இல் அகில இந்திய வானொலியில் அனைத்து மொழிகளிலும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்பட்டது. மேலும், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நூலாக வெளி வந்துள்ளது. 'இராணி முத்து மாத இதழ் ஓர் இலட்சம் பிரதியும், பல பதிப்பகங்கள் சார்பில் இருபது பதிப்புகளும் வெளிவந்து விந்தன் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கின்றது. அதோ! நமக்காகப் பாலும் பாவையும் காத்திருக்கிறது. நேரத்தோடு சுவைப்போம்; நிசங்களையே பேசுவோம். கதைச் சுருக்கம் தருமமிகு சென்னை - கந்தகோட்டத்தில் புத்தகக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த கனகலிங்கம், புத்தக விற்பனைக்காகக்