பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல்கள 61 கனகலிங்கத்தின் முடிவைக் கேட்டுக கதறுகிறாள், துடிககிறாள் சித்தம் கலங்கியவள் போல் எங்குப் போகிறோம என்று புரியாமல போய்க் கொண்டிருநதாள் வழியில் சித்தப்பாவின் வீட்டை நெருங்கியபோது ஏதோ பாசத்தால் உந்தப்பட்டவள் உணர்வு பெற்றுச் சாளரத்தின் வழியே நோக்குகிறாள் அங்கே அகல்யாவின் அப்பாவும், சித்தப்பாவும் பேசிக் கொண்டிருப்பதை ஒட்டுக் கேட்கிறாள் கனகலிங்கம்தான் அகல்யாவைக் கடத்திக் கொண்டு போனான் என்று ஆத்திரப்பட்ட முதலாளி பரமசிவம், ஆயிரம் ரூபாய் செலவழித்து ஒரு காரோட்டியின் துணையுடன் கனகலிங்கத்தின் வாழ்க்கையை முடித்துவிட்டதாக ஆறுதல் அடைந்தபோது, "நம்ம அகல்யாவோடு ஒடிப்போனவன் இந்திரன் அல்லவா?" என்று அவளின் அப்பா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகல்யா, அடப் பாவிகளா!' என்றவாறு நடக்க முடியாமல் நடக்கிறாள் வழியில் தசரதகுமாரனைச் சந்திக்கிறாள் அவன், 'யார் உன்னைக் கைவிட்டாலும் நான் உன்னைக் கைவிடமாட்டேன்' என வாக்களித்த போது அவனைப் பின் தொடர்கிறாள் தசரதகுமாரன் வீட்டை அடைந்தபோது, 'சார் ரொம்ப நேரம் கழித்து வந்திருக்கிறீர்களே - பால் கெட்டுப் போய் விட்டதே' என்று சமையற்காரன் சொன்னதைப் பெரிய தத்துவமாக நம்பியவன் சிறிதும் தாமதிக்காமல் அகல்யாவை வெளியே தள்ளிக் கதவைச் சாத்துகிறான் அடுத்த கணம் . இந்த மனிதர்களைவிட இந்தச் சமூகத்தைவிட ஆயிரமாயிரம் பங்கு பெரியதும் பரந்து விரிந்ததுமான கடல், யார் கைவிட்டாலும் அது தன்னைக் கைவிடாது யார் கதவைச் சாத்தினாலும் அது கதவைச் சாத்தாது என்கிற எண்ணம் அகல்யாவிற்குப் பளிச்சிடவே அவள் கடலை நோக்கி ஓடுகிறாள் கடல், 'கெட்டுப் போனவள் என்று நெட்டித் தள்ளவில்லை; ஒடிப் போனவள், என்று ஒதுக்கிடவில்லை, பழியைச் சுமந்தவள், பாதிக்கப் பட்டவள் என்னும் பரிவோடும் பாசத்தோடும் வங்கக் கடல் அகல்யாவை வாரியணைத்துக் கொண்டது திறனாய்வு லங்கைப் பல்கலைப் பேராசிரியர் கலாநிதி கைலாசபதி அகலிகை பற்றிய ஆய்வு நூலில் பாலும் பாவையும் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளார் அதில் சில பகுதிகள் 'விந்தன், வ ரா பாரதியார் ஆகியோரின மரபையொட்டி, 'இழுக்கை ஒழிக்கவும், ஒழுக்கத்தை வளர்க்கவும் நமக்கும் நாட்டுக்கும்