பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 விந்தன் விவகாரத்திற்கு ரொமபவும் சாதாரணமாகத் தீர்ப்புச சொல்லி விட்டார், அகிலன் எழுதியுள்ள 'சிநேகிதி நாவலின் கதையே ஆங்கில நாவல ஒன்றின் தழுவல் என்று ஆனால், அகிலனின் இரசிகர்களும், நண்பர்களாக இருந்த சில பிரமுகர்களும் 'அமுத சுரபி' இதழ் வெளிவருவதற்கும், வந்த இதழ்களை விற்பனை செய்வதற்கும் பலவிதமான இடையூறுகளையும், பயமுறத்தல்களையும் தமிழகமெங்கும் சில மாதங்கள்வரைத் தொடர்ச்சியாக நடத்தி வந்தார்கள் இத்தகைய இடையூறுகளால் ஏற்பட்ட இழப்புகளையும். விரோதங்களையும் பெரிது படுத்தாமல் தம்முடைய பத்திரிகையின் இலக்கிய சேவைக்கும், விந்தனின் எழுத்தாற்றலுக்கும் கிடைத்த வெற்றியெனக் கருதி 'அமுத சுரபி' இதழில் அன்பு அலறுகிறது' தொடர்கதையைத் தொடர்ந்து வெளியிட்டனர் நிர்வாகத்தினர். எதிர்ப்புகளே தம் எழுத்துக்குக கிடைக்கும் சிறந்த வெற்றிகள் என்கிற எண்ணமுடைய விந்தனும் தொடர்ந்து எழுதினார் அந்த தருணத்தில் அகிலன் விந்தனுக்கு உருக்கமாக எழுதிய கடிதத்தைப் படித்து மனம் நெகிழ்ந்தவர் தொடர் கதையின் சீற்றத்தை ஒருவாறு தணித்து அத்துடன் தொடர்கதையை முடித்துக் கொண்டார் எனினும், அகிலனின் இரசிகர்களும் நண்பர்களும் விந்தனுக்குப் பல வழிகளில் பாதிப்புகளை உண்டாக்கினார்கள்; அதில் ஒரு பகுதியே 'அன்பு அலறுகிறது' நாவல் ஒரே பதிப்போடு மறைக்கப்பட்டது 来米率 1951-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அகிலன் சிநேகிதி' என்கிற நாவலைப் புத்தமாக வெளியிட்டுள்ளார் அந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தைப் பாராட்டியும், ஆசிரியரை வாழ்த்தியும் முன்னுரை வழங்கியுள்ளார் டாக்டர் மு.வ அவர்கள் 'சிநேகிதி நாவலைப் படித்த விந்தன், அகிலன் சொல்லியிருந்த கருத்தின் மேல் எவ்வளவு கொதிப்பும் கோபமும் அடைந்தார் என்பதை, 'ஓர் இலக்கிய வாதியின் கலை உலக அனுபவங்கள் என்ற நூலில் ஜெயகாந்தன் கூறுகிறார் 'நண்பர் விந்தன் ஒரு நாள் திரு அகிலன் எழுதிய சிநேகிதி என்ற நாவலைக் கொண்டு வந்து முன்பெல்லாம் தமிழ் ஒளி செய்வாரே அதுமாதிரிப் பிய்த்து உதறி விமர்சனம் செய்து கொண்டிருந்தார் 'பிடிக்காத நாவலை நீங்கள் ஏன் படிக்கிறீர்கள்?' என்று கேட்டேன் "எழுதுபவன் தன் காலத்தில் எழுதப்படுகிற எழுத்துக்களைப் படிக்க வேண்டியது ஒரு சமுதாயக் கடமை என்றார் விந்தன்'