பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல்கள் 67 ஆஸ்தியைப் பயன்படுத்த வேண்டுமென்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்து இவ்வுலகத்தை விட்டு விடுதலை பெறுகிறாள் அவளுடைய முடிவைக் கண்டு சிநேகிதி அலறுகிறாள். அன்பு அலறுவது போல் திறனாய்வு திரு அகிலன் எழுதிய 'சிநேகிதி நாவலைப் படித்து விந்தன் ஏன் கொதிப்பும் கோபமும் அடைந்தார் என்பதற்கான பதிலை ஒரு கொள்கையின் அடிப்படையில் தருவதே இந்த நாவலின் நோக்கம், வேறுவிதமான நோக்குக்கோ - காழ்ப்புக்கோ இதில் இடம் இருப்பதாகத் தெரியவில்லை எனினும், சிநேகிதி"க்கு ஒரு சிநேகிதனாக இருந்துவிட்டு எல்லோருடைய சிநேகிதத்தையும் பெற்று இருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம். ஆனால், சிநேகிதியை'யை அறிந்த அளவிற்குச் 'சிநேகிதனையும் அறிந்துள்ள தமிழர்கள் இந்தப் புதிய 'சிநேகிதத்தை எப்படி வரவேற்பார்கள். அல்லது வாழ்த்துவார்கள்? அதனால் வழக்கம் போல் சிநேகிதி'யைப் படித்துச் சிந்திக்க ஆரம்பித்தார் அகிலன் கூட 'இந்த நாவலை நான் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்காகவும், சிந்திக்க விரும்புகிறவர்களுக்காகவும் எழுதுகிறேன்!' என்றல்லவா முன்னுரையில் சொல்லியிருக்கிறார் விந்தன் கூட அதைத்தானே செய்தார்? அகிலன் எந்தமாதிரி சிந்திப்பவர்களுக்காக எழுதினாரோ, எப்படிச் சிந்திக்க வேண்டும் என்று விரும்பினாரோ என்பதெல்லாம் நமக்குத் தெரியாது ஆனால், விந்தன் சரியாகவும் மிகுந்த பண்போடும் - அதிலும் தமிழ்ப்பண்போடும் சிந்தித்திருப்பதாகவே தெரிகிறது. அதனால்தான் நாமும் அவரோடு சேர்ந்து சிந்திப்பதற்கு விரும்புகிறோம். இந்தத் திறனாய்வில் விந்தனின் நோக்குகளையும், போக்கு களையும் விமர்சிப்பதே நமது நோக்கமாயினும், இந்த நாவலைப் பொறுத்த வரையில் அகிலனையும் சேர்த்து விமர்சிக்கும்படியான வேலையும் நமக்குச் சேர்த்து விடுகிறது, சிநேகிதி"யை அறிமுகப் படுத்தியவர் அவரே என்பதால் விமர்சனத்திற்கொரு விமர்சனம் என்பார்களே அதைபோல் அன்று இது சமுகப் பொறுப்போடும், மனிதநேயத்தோடும் கூடிய இலக்கிய விமர்சனமாகும் மனிதன் மாறவில்லை 'எதை எழுதினாலும் அதை நாலு பேர் போற்றவாவது வேண்டும்;