பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 விந்தன் அருந்திக் கொண்டிருப்பதை அறிந்து மனவேதனையுற்று மீண்டும் அவரைச் சந்திக்கக் கூடாது என்னும் முடிவோடு வீடு திரும்புகிறாள் நறுமணம். பெண்கள் விஷயத்தில் ஆண்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்பதை நறுமணத்தின் தாய்மாமன் வெளிப்படுத்தி விடுகிறார். அதனால் அங்கிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்கிற முடிவுடன் நறுமணமும் நம்பியும் புறப்படத் தயாராயிருக்கும் நிலையில், அப்பா இறந்து விட்டார்' என்று செய்தி வரவே எல்லோரும் புறப்பட்டுச் சென்னைக்கு வருகின்றனர் 'உணர்ச்சி வசப்படக்கூடாது உணர்ச்சி வசப்படக்கூடாது' என்று ஊருக்கு உபதேசம் செய்துவந்த டாக்டர் நெடுமாறனார் உணர்ச்சி வசப்பட்டு, 'அம்மாவுக்கு அப்பாவுக்கு, ஆட்டுக் குட்டிக்கு, பூனைக்குட்டிக்கு எனப் புற்றீசல் போல் எழுதிக் குவித்த அவரின் நூல்களை முற்போக்குச் சிந்தனையுடன் விமர்சனம் செய்திருந்த நம்பியை நேரில் காண வந்தவர் அவனோடு ஆவேசமாகப் பேசிவிட்டு, பத்திரிகையைக் கிழித்துயெறிந்துவிட்டுப் போகும் சமயத்தில் நறுமணத்தைக் கண்டு நீயா? என் வியந்தவாறு பல்லிளித்து நிற்கிறார் புற வாழ்க்கையில் சிரித்துச் சிரித்துப் பேசியே சாதனைகளைக் கண்டவர். அக வாழ்க்கையில் நீலிக் கண்ணிர் வடித்துப் பல பெண்களின் நிம்மதியைக் குலைத்தவர், டாக்டர் நெடுமாறனார். இவரைக் கண்டதும் நறுமணத்திற்கு நந்தி மலையில் கண்ட காட்சி நினைவுக்கு வருகிறது; டாக்டருக்கும் அவ்வாறு நினைவுக்கு வரவே, அதை மூடிமறைக்கும் வகையிலும், நறுமணத்தின் சகோதரன் நம்பி ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் என்பதை அறிந்தும் அவன் முன் ஓர் அபலைப் பெண்ணைப் போல் விம்மி விம்மி அழுது, 'என் மேல் கொண்ட காதலினால் கண்ணகி அம்மையார் தன் கணவனைக் கொலை செய்தாள்; அந்த வேதனையைத் தாளமுடியாமல் தவித்த எனக்குக் குடிக்க வழி காட்டினாள் பல வழிகளில் என்னை ஆட்டி படைத்தவள் கடைசியில் ஆற்றில் விழுந்து இறந்தாள் இப்பொழுது நான் நிம்மதியோடு இருக்கிறேன்' என்று உருக்கமாகக் கூறி நறுமணம், நம்பி ஆகிய இருவரின் அன்பையும் அனுதாபத்தையும் பெறுகிறார். அன்று முதல் ஏதாவது காரணத்தை வைத்துக் கொண்டு நறுமணத்தின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார் டாக்டர் நெடுமாறனார், முதலில் ஏன் வருகிறார்?' என்று நினைத்தவள் பின்னர் ஏன் வருவதில்லை?" என்று நினைக்கிறாள் நறுமணம்