பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 விந்தன் காதலும் கல்யாணமும் 'முற்போக்குச் சிந்தனையுடைய விந்தன், எநத முற்போக்கு இயக்கத்தோடு அதைச் சார்ந்து இருக்கும் இலக்கிய நிறுவனத்தோடும் இதழ்களோடும் தொடர்பு கொள்ளாமல் தனித்து இயங்கியதால், அண்மையில் வெளிவந்த இலக்கிய மதிப்பீடுகளில் விந்தன் பெயர் இடம் பெறவில்லை' என்று கருதும் சில முற்போக்கு ஆய்வாளர்கள், விந்தன் எழுத்துகள் மக்கள் மனத்தில் இடம் பெற்றிருக்கின்றன என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்; அல்லது மறைத்து விடுகிறார்கள் இவ்வாறு முற்போக்காளர்கள் என்று சிலரால் மட்டுமே நம்பப் படுகிறவர்களால் விந்தன் மறைக்கப்பட்ட போதிலும் வேறு நற் போக்குள்ளவர்களால் விந்தன் மனிதாபிமானத்தோடு மதிக்கப் பட்டார் என்பது கவனிக்கத் தக்கது ஆம், வாழ்க்கையின் பிரச்சனைகளுக்குகிடையே பிறந்தும் வளர முடியாத என் நாவல்களை சர்வ வல்லமையுள்ள காசால் தான் காப்பாற்ற முடியுமா? கடவுளே உன்னால் காப்பாற்ற முடியாதா?’ என்று விந்தன் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தினந்தந்தி நிறுவனத்தார் அவர்களின் வாராந்திர இராணி இதழில் விந்தனை நெடுங்கதை எழுதும்படி தூண்டினர் 'தினந்தந்தி நிறுவனத்தின் கொள்கை வேறு வகையாக இருந்தபோதிலும் தன் கொள்கைப் படியே இராணி இதழில் 'கனவிலே வந்த கன்னி' என்னும் தலைப்பில் தொடர்கதையை எழுதினார். அக்கதையை காதலும் கல்யாணமும்' என்னும் தலைப்பில் க.நா. சுப்பிரமணியம் முன்னுரையுடன் காவேரி புத்தக நிலையம் 1965-இல் புத்தகமாக வெளியிட்டது. பல பிரச்சனைகளுக்கிடையே பிறந்த இந்த நாவல், சமூகத்தில் உள்ள சீர்கேடுகளை மனிதர்களின் குணக்கேடுகளை அதிலும் அந்தஸ்துள்ள மனிதர்களின் சமூக விரோதச் செயல்களை எவ்வாறு படம் பிடித்துக் காட்டுகிறது என்பதைக் காண்போம் கதைச் சுருக்கம் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு எத்தனையோ விதமான அதிகாரங்கள், ஆதாயங்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப வாய்த்திருந்த போதிலும், வாரத்தில் இரண்டு நாள் கிடைக்கும் விடுமுறை பெரிய வாய்ப்பாகும்! அந்த விடுமுறையை வாலிபர்கள் கனவு காண்பதற்கும், காதலிப்பதற்கும் இன்னும் வேறு எதுயெதற்கோ பயன்படுத்துகிறார்கள்.