பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல்கள் 77 செய்ய மாட்டார், திருக்குறள் படித்தவர்' என்பதையெல்லாம் நம்பாமல் ஒவ்வொரு மனிதனின் மறுபக்கத்தையும் காண கவனமாக இருந்தவர். இக்கதையில் பலருடைய மறுபக்கங்களை எழுதிக் காட்டியுள்ளார்; அவர்களில் முன்னாள் போலீஸ் அதிகாரி ஆபத்சகாயம் குறிப்பிடத்தக்கவர் சுயம்வரம் கதைச் சுருக்கம் பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் நடைபெறும் திருமணங்கள் பழமை என்பதாலோ என்னவோ, ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் மாதவனும் மதனாவும் நிச்சயித்த வண்ணம் திருநீர்மலையில் திருமணம் நடைபெறுகிறது மாதவன் நிச்சயித்த வண்ணம் நடைபெற்ற திருமணத்தைக் கண்டு கொதிப்பும் கோபமும் கொண்ட அவன் பெற்றோர்கள் கிராமத்திற்குப் புறப்படக் கிராமத்திலிருக்கும் மாமா மகாலிங்கம் டிசம்பர் சீசனுக்காக சென்னை வருகிறார் குடும்பத்துடன். மாமாவின் வரவால் மனம் கலங்கிய மாதவன், மதனாவை ஓர் அறையில் மறைத்து வைத்து மறுநாள் காலையில் அவள் சிநேகிதி அருணாவின் அறைக்கு அனுப்பி வைக்கிறான் அருணா மாதவனைக் காதலித்தாள். அந்தக் காதல் தோல்வியில் முடிந்ததால், மாதவனை மதனாவிடமிருந்தும், மதனாவை மாதவனிட மிருந்தும் பிரித்திட சினிமாவில் வரும் வில்லி'யைப் போல் சாகசங்கள், சூழ்ச்சிகள் புரிந்து இறுதியில் 'பாவம் அருணா!' என்று அனுதாபப் படும்படி ஆகிவிடுகிறாள் இவளைப்போலவே ஆனந்தன், இவன் மதனாவைக் காதலித்தாள். அந்தக் காதல் கைகூடாத போது வேதனையுற்று மாதவன் மதனா உறவை முறித்திடக் கீழ்த்தரமான சில முயற்சிகளில் ஈடபட்டு முடிவில் தோல்விகளையே தழுவி அனுதாபத்துக்குரிய ஆனந்தனாகி விடுகிறான் மாதவன் - மதனா, ஆனந்தன், அருணா இவர்கள் அனைவரும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர்கள், நண்பிகள். இவர்களில் ஆனந்தனும், அருணாவும் மாதவனுக்கு எவ்வளவுதான் துரோகம் நினைத்த போதிலும், மாதவன் மட்டும் அவர்களை நண்பர்களாகவே நேசிக்கிறான்; நாளடைவில் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கிறான். இத்தகைய நல்லெண்ணத்தினால்தான், தமது முதலிரவுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் வந்து சேர்ந்த மாமா மகாலிங்கத்தைக் கோபாவேசமாகப் பேசித் திருப்பி அனுப்பாமல் குழைந்து குழைந்து