பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல்கள் 79 அருணாவும், மதனாவும் சென்ற இடம் முன்னாள் நீதிபதி ஒருவரின் இல்லம் என்பதையும், அங்கு இரவு விடுதி நடபபதையும் அறிந்து திடுக்கிட்ட மாதவன், அந்த அநீதியைத் தொலைபேசி மூலம் காவல் துறைக்குத் தெரிவிக்கிறான் அதே நேரத்தில் மதனாவையும் சந்திக்கிறான் மதனாவை அழைத்துக்கொண்டு மாதவன் இந்த இல்லத்திலிருந்து வெளிவரும் நேரத்தில் காவற் துறையினர் உள்ளே நுழைகின்றனர் வீடு நோக்கி வரும் வழியில் மாதவனும், மதனாவும், அருணா, ஆனந்தன், நீலா ஆகியவர்களை நினைத்துப் பார்க்கின்றனர் ஆனந்தனும், அருணாவும் செய்த தீமைகளை மறநது அவர்கள் செயத நன்மைகளையே நினைத்துப் பார்க்கின்றனர். இதற்கெல்லாம் மேலாக நீலாவின் திருமுகமே தெய்வத் திருமுகமாக அவர்கள் முன் காட்சியளிக்கிறது திறனாய்வு இன்று எழுத்தாளர்களுக்கு எத்தனையோ கவர்ச்சிகள், சிலருக்கு அரசியல் கவர்ச்சி; சிலருக்குச் சினிமா கவர்ச்சி, வேறு சிலருக்கு வேறு ஏதேதோ கவர்ச்சிகள் ஆனால், விந்தனுக்கு எழுத்துக் கவர்ச்சி'யைத் தவிர வேறு எந்தக் கவர்ச்சியும் இல்லை என்பதை எல்லாரும் அறிவார்கள். ஒரு காலகட்டத்தில் கலையும், இலக்கியமும் ஆளும் வர்க்கத்தை அறிமுகப்படுத்துவதற்கும், ஆனந்தப்படுவதற்கும் பெரிதும் பயன் பட்டன. அதற்கு ஆதரவாக இருந்த கலைஞனும், இலக்கியவாதியுமே சிறந்த படைப்பாளிகள் என்று நாட்டுமக்கள் நம்பினர் இத்தருணத்தில் அந்த "ஆமாசாமி’களை அடையாளம் காட்ட முனைந்து மக்கள் கலைஞர்கள் முதலில் ஆளும் வர்க்கத்தையே அடையாளம் காட்டினார்கள் எப்படி? கேலியும் கிண்டலுமாகப் பழித்துக்கூறிப் பரிகசிக்கும் முறையில்; சித்திரங்கள் தீட்டியும், சொற் சித்திரங்கள் புனைந்தும் மக்களைச் சிந்திக்கத் தூண்டினார்கள். அதன் பிறகே கலை, கலைக்காகவே என்ற மாயை மறைந்து, மக்களுக்காகக் கலையும் இலக்கியமும் மலர்ந்தன. இந்த மறுமலர்ச்சிக்கு முன்னோடி யாக இருந்தவர்களில் மக்கள் எழுத்தாளர் விந்தனும் ஒருவராவார் இந்தச் சுயம்வரம் நாவலை விந்தன் வேறு பெயரில், வேறு தலைப்பில் 'தினமணிக் கதிர் வார இதழில் தொடர் கதையாக எழுதினார். பின்னர் இராணி முத்து மாத இதழ் இலட்சக்கணக்கிலும், ஸ்டார் பிரசுரம் ஆயிரக்கணக்கிலும் வெளியிட்டனர் அந்த வகையில் இந்த நாவல் மக்களிடையே விரிவான முறையில் விளம்பரமாகி