பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 விந்தன் இருக்கிறது என்பதை நம்மால் அறியமுடிகிறது இந்த நாவலின் முன்னுரையில் விந்தன் கூறுகிறார் 'இது டீன் ஏஜர்'களுக்காக எழுதப்பட்ட நாவல்தான் என்றாலும், இதில் வரும் 'ஆனந்தனைப் போலவோ, அருணாவைப் போலவோ வேறு யாரும் ஆகிவிடக்கூடாது என்பதே என் விருப்பம் உங்கள் விருப்பமும் அதுவாகத்தான் இப்போதும் இருக்கும் என்பது என் நம்பிக்கை. "பெண்களைப் பல வகையிலும் 'தெய்வமாகப் போற்றி வந்தது இந்த நாடு; மாதர் தம்மை இழவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்' என்று பாரதியைப் பொங்கியெழுந்து பாடச் செய்தது இந்த நாடு. அப்படிப்பட்ட நாட்டில் பெண்களை வெறும் போகப் பொருள்களாகக் கருதி, அவர்களுடைய பெயர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், ஒளிந்து கொள்ளாமலும் சில ஆண்கள் கவர்ச்சிகரமாக, வயிற்றுப் பிழைப்புக்காக எழுதும் கதைகள் அவற்றைக் கூசாமல் வெளியிடும் ஏடுகள் - கண்ணராவி, கண்ணராவி அந்த ரகத்தில் சேராத இந்த நாவலை அவர்கள் சொல்லும் 'டீன்ஏஜர் சாரும் படிக்கலாம்' இன்று பலரால் எழுதப்படும் டீன் ஏஜ்" நாவல்களை யார் படிக்கிறார்களோ இல்லையோ, எழுதுபவர்களின் குடும்பங்களில் உள்ள மனைவி மக்கள்கூட படிக்க முடியாதபடி பல கதைகளில் கேவலமாகப் பெண்களைப்பற்றி எழுதப்படும் நிலையில், "இந்நாவலை எல்லோரும் படிக்கலாம்!' என்று விந்தன் தெளிவாகவும், தைரியமாகவும் சொல்லுகிறபோது அவர் எழுத்தில் நமக்கு மரியாதையும் மதிப்பும் ஏற்படுகிறது.