பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புதிய வடிவங்கள் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ள விந்தன் சோதனை முயற்சியாக சில புதிய வடிவங்களையும் எழுதியுள்ளார் அவற்றில் குட்டிக்கதைகள், ஒ மனிதா, மிஸ்டர் விக்கிரமாதித்யன் போன்றவை அடங்கும் தமிழில் ஏராளமான குட்டிக் கதைகள் இறக்குமதி ஆகியுள்ளன, கலில் ஜிப்ரன் முதல் காண்டேகர் வரையில், அதனால் விந்தன் ‘அள்ளவில்லை போடுகிறேன் என்று பல குட்டி கதைகளை எழுதியுள்ளார் \ விந்தன் குட்டிக் கதைகள் கவிதைகள் போல சுருக்கமானவை, சுவையானவை, சிந்தனையைத் துண்டுபவை உதாரணத்துக்கு சில கதைகள் "பஞ்சத்தின் மேல் ஏறி பசி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது' "இனி எனக்கு இங்கே இடமில்லை என்கிறது அன்பு'. 'எனக்கும் அதே கதிதான் என்றது பண்பு, வெட்கம் இனி என்னை யார் பொருட்படுத்தப் போகிறார்கள் என்றது வேதனையுடன், வேட்கை, ரொம்ப நல்லதாய் போயிற்று என்றது. நீ என்று தொலைகிறாயோ அன்று தான் எனக்கு நிம்மதி என்றது மகிழ்ச்சியுடன் இதைக் கேட்டுக் கொண்டே வந்த மானம், மனிதன் போகிற போக்கைப் பார்த்தால் என்னைக் கூட துறந்து விடுவான் போலிருக்கிறது என்றது பெருமூச்சுடன். உனக்கே அந்தக் கதி என்றால் எனக்கு என்ன கதி என்றது மரியாதை அப்போது ஈகை தலைகுனிந்தபடி அங்கே வர உன்னுடைய நிலையும் அதே நிலைதானா? என்று கேட்டது இரக்கம். அதில் வேறு சந்தேகமா என்றது பொய் இல்லை அப்பனே, இல்லை என்னைப் பொறுத்தவரை அதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஏனெனில் பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பது எனக்குத் தெரியும் என்றது