பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 விந்தனின் கவிதை உலகம் క్లి காலத்தில் விந்தன் கவிதைகள் தான் எழுதினார். பின்னர் கவிதை எழுதுவதை கைவிட்டு கதைகள் எழுத ஆரம்பித்தார் ஒரு கால கட்டத்தில் நாட்டில் அரிசி பஞ்சம் ஏற்பட்டபோது அரிசி என்ற பெயரில் குமுதம் பத்திரிகையில் கவிதை ஒன்று எழுதி அதை பலரும் படித்துப் பாராட்டினார்கள். 1950 பின்னர் சினிமாவுக்குப் போன விந்தன் சினிமாவில் பாடல்கள் எழுதினார் ஏழு படங்களுக்கு வசனம் எழுதியுள்ள விந்தன் ஆறு பாடல்கள் எழுதியுள்ளார். அதில் மூன்று பாடல்கள் பிரபலமானவை 'அன்பு என்ற படத்தில் ஒலிக்கும் பாடல் சுத்தாத இடமில்லை கேட்காத பேரில்லே சோத்துக்கு வழிகாட்ட ஆளில்லே செத்தபின்பு சிவலோகம் செல்ல வழிகாட்டும் பித்தர் ஏனிந்த நாட்டிலே ஒண்ணும் புரியவில்லை தம்பி எனக்கு ஒண்ணும் புரியவில்லை தம்பி கண்ணு ரெண்டும் சுத்துது காதை அடைக்குது கஞ்சி கஞ்சி என்று வயிறு கெஞ்சிக் கெஞ்சி கேட்குது கூண்டுக்கிளி படத்தில் கொஞ்சுங் கிளியான பெண்ணைக் கூண்டுக்கிளி ஆக்கிவிட்டுக் கெட்டி மேளம் கொட்டுவது சரியா? தப்பா? குலேபகாவலி மயக்கும் மாலைப்பொழுதே நீ போ, போ! இனிக்கும் இன்ப இரவே நீ வா, வா! பன்னித் தெளிக்க பணி பெய்யுமே! பசும்புல் படுக்கப்பாய் போடுமே! திரை உலகில் இன்றும் சினிமா ரசிகர்களால் ரசித்துப் பாடப் படுகின்ற இப்பாடல்கள் விந்தனுக்குப் புகழ் சேர்த்த பாடல்கள்.