பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் 89 புதுமைப்பித்தன் புகையிலையை, புகையாகவும், காரமாகவும் பயன்படுத்தினார். அதுதான் அவரின் உயிரைக் குடித்து விட்டது என்றார்கள் கவி-பாரதியார் இறந்ததற்கு காரணம் ‘கஞ்சா என்று சொல்லவில்லை? அந்த மாதிரி. (புதுமைப்பித்தனும் புகையிலையும் - பொன்னி - 1951) 米米米 புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் குடும்ப விளக்கான திருமதி பழனியம்மாளுடன் ஓர் உரையாடல். “உங்கள் கணவர் தாம் எழுதிய குடும்ப விளக்கை உங்களுக்குப் படித்துக் காண்பித்தாரா? அதில் வரும் முதியோர் காதலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" 'நினைக்கிறதென்ன? வாழ்க்கையில் உள்ளதைத்தானே எழுதியிருக்கிறாரு குடும்பவிளக்கு மட்டுமல்ல, சினிமாவுக்கு வசனம் எழுதினாக்கூட அதை எங்களுக்குப் படிச்சுக் காண்பிப்பாரு, நாங்க ரசிக்கிறோமா கதை எங்களுக்கு விளங்குகிறதா என்று கேட்பாரு' 'ரொம்பக் கோபக்காரரான அவர் உங்களிடம் எடுத்ததெற்கெல்லாம் கோபப்படுவாரா?” "அப்படி ஒண்ணுமில்லே. கோபக்காரர்னு பேரு ஆனா குழந்தை மாதிரி பழகுவாரு அதனால்தான் இத்தனைபேரு புகழ் ஏற்பட்டதுன்னு நினைக்கிறேன் அவரின் கடைசி காலத்தைப் பற்றி அந்தக் கதையை ஏன் கேட்கிறீங்க, மெட்ராசிலே பாரதியார் கதையையும், பாண்டியன் பரிசையும் படமாக்க அவரு கம்பெனி ஆரம்பிச்சாரு ஏறக்குறைய அறுபது நாளு ராவும் பகலா உட்கார்ந்து எழுதி முடிச்சாரு அதனாலே மார்வலிகூட வந்துட்டுது. அந்த வலியிலேயும் எடுத்த காரியத்தை நிறைவேற்ற படாதபாடு பட்டாரு. அவரை யாரும் கவனிக்கவில்லை. கை கொடுக்கவும் இல்லே. அதுக்குள்ளே மார்வலி அதிகமாப் போச்சு. ஆஸ்பத்திரியிலே சேர்த்தோம். அங்கேயே காலமாயிட்டாரு" (தினமணி கதிர்) புதுமைப் பித்தனும், பாரதிதாசனும் எழுதி எழுதியே கவனிப்பாரின்றி மரணம் அடைந்தார்கள் என்பதை இக்கட்டுரைகள் நமக்கு காட்டுகின்றன. விந்தன் விரும்பி படித்த புத்தகங்களில் மார்க்சிம் கார்க்கியின் 'தாய் ஒன்று அதைப்பற்றி சில தகவல்கள். ' இமயமலை வீழ்ந்தது போல் என்று எக்காளத்தோடு பாடினானே பாரதி அந்த - அரசின் வீழ்ச்சிக்குக் கார்ல் மார்க்கம்