பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகை உலகில் புரட்சி 93 உழைப்பினாலும் ஊக்கத்தினாலும் உயர்ந்தவரான பூரீ.வி.கோவிந்தன் (விந்தன்) இப்பத்திரிகையின் ஆசிரியராவார் அவருடைய பண்புகள் பத்திரிகையிலும் மலர்ந்து திகழ்கின்றன ஏதேனும் ஒரு துறையில் ஒருவர் புதிய பாதை வகுத்து அதில் வெற்றி கண்டால் அதே பாதையில் இன்னும் பலர் போக முயற்சிப்பது உலக இயல்பு. அது தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்யும் ஆனால் ஆசிரியர் 'விந்தன் ஆரம்பித்து நடத்தும் இந்தப் பத்திரிகை பழைய பாதை எதையும் பின்பற்றாமல் தனக்கென்று புதிய பாதை ஒன்றை வகுத்துக் கொண்டிருக்கிறது கட்டுரைகள், கதைகள் குறிப்புகள், படங்கள் முதலிய எல்லா 'அம்சங்க'ளிலும் தனிச் சிறப்பு காணப்படுகிறது. முக்கியமாக இதோ ஒரு சுயமரியாதைக்காரர்' என்னும் தலைப்பை உடைய பகுதி பத்திரிகை உலகத்துக்கே ஒரு புதுமை என்று சொல்லும்படி இருக்கின்றது இளம் பிராயத்தில் ஒரு காலை இழந்துவிட்ட ஒரு மனிதர் வாழ்க்கையில் நிராசை அடைந்து விடாமலும் பிறரை அண்டிப் பிழைக்காமலும் சுயமாகத் தொழில் செய்து சுயமரியாதையை நிலைநாட்டிக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்த உண்மை வாழ்க்கைக் குறிப்பு உயர்தரமான பத்திரிகை அம்சமாகும். மனித குலத்தை எப்படி உயர்த்தலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம். உள்ளே ஒரு ஹாஸ்யத்துணுக்கு இரண்டு ஆபீஸ் குமாஸ்தாக்கள் ஒரு பெரிய கட்டடத்தைப் பார்த்து பேசிக் கொள்கிறார்கள் இவ்வளவு பெரிய கட்டடத்தை கட்டுவதற்கு எவ்வளவு குமாஸ்தாக்களின் எலும்பை நொறுக்கி அஸ்திவாரம் போட்டிருக்க வேண்டும் என்று வியப்படை கிறார்கள். இதிலிருந்து பத்திரிகையின் கொள்கையும் போக்கும் எப்படி இருக்கும் என்று ஒருவாறு யூகிக்கலாம். உழைப்பாளிகளின் கட்சியை வன்மையாக எடுத்துச் சொல்வதற்கு மனிதன் ஒரு சிறந்த சாதனமாக விளங்கும் என்று எதிர்பாக்கலாம். (கல்கி 1.10.1954) விந்தன் எழத்துக்களை அங்கீகரித்து பாராட்டியது போலவே மனிதன் இதழையும் பாராட்டினார் இதற்கெல்லாம் நன்றியாக, என்னை மனிதனாக்கிய 'மனிதன்' என்று பேராசிரியர் கல்கி'க்கு மனிதன் இதழை காணிக்கை ஆக்கினார் விந்தன்