பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 விந்தன் பாராட்டியதோடு ராதாவையும் விந்தனையும் பார்க்க விரும்பினார் இதை அறிந்த ராதா அவர்கள் "அவர் ரொம்பப் பெரியவர்' என்று சொல்லியதோடு சரி, பெரியவரைப் பார்க்கவே இல்லை பள்ளிக்கூடமே போகாத எம்.ஆர் ராதா தம் அறிவாலும், ஆற்றலாலும் அரசியலில், கலைத்துறையில் பல பிரமுகர்களின் நட்பை பெற்றதுண்டு. ராதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று செங்கற்பட்டு அடுத்த பாலாற்றில் டி.வி.எஸ்.வேன் ஒன்று நகர முடியாமல் சிக்கிக் கொண்டது. அவ்வழியே வந்த ராதா, தம் அறிவை பயன்படுத்தி எளிமையாக வேனை வெளியில் எடுத்து விட்டார். அடுத்த நாள் காலையில் ராதாவின் வீட்டு வாசலில் பெரிய கார் ஒன்று நின்றது அதைப் பற்றி விசாரித்தபோது டி.வி சுந்தரம் அய்யங்கார் அனுப்பியதாகவும் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கொடுங்கள் எனச் சொன்னார் என்றும் கூறப்பட்டது. இப்படி டி.வி.சுந்தரம் அய்யங்கார், ஜி.டி.நாயுடு, டாக்டர், ரங்காச்சாரி, நீதிபதி கணேசய்யர் போன்றவர்கள் ராதாவிற்கு நண்பர்களாகவும் ஆபத்தில் ஆதரிப்பவர்களாகவும் இருந்தார்கள். சிறப்பாக கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் - பத்மாவதி காதல் விவகாரத்தில் அவருக்கு பங்கும் உண்டு. இந்நூலில் எம் ஆர். ராதா வெறும் நடிகர் என்ற நிலையிலிருந்து மாறி அன்புக்கும் பண்புக்கும் உரியவராக, சீர்திருத்த செம்மலாக, தலைவனே தவறு செய்தாலும் தட்டி கேட்கும் தன்மானச் சிங்கமாக உயர்ந்து நிற்கிறார் சிறந்து விளங்குகிறார்