பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 93 தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களை ஆதரித்தவர். (வேலை நிறுத்தம் ஏன்? - என்ற அவரது நூல் குறிப்பிடத்தக்கது.) உழைப்பாளர்களின் வாழ்வும் தாழ்வும், தமது வாழ்வும் தாழ்வும் எனக் கருதியவர். 'அய்யா! பொய்யும் புரட்டும் இல்லாத லோ சர்க்கிளே எனக்குப் போதும். அவர்கள் வாழ்ந்தால், நானும் வாழ்கிறேன், அவர்கள் செத்தால் நானும் சாகிறேன்” - இது விந்தனின் வாக்குமூலம். இத்தகைய கோட்பாட்டு உறுதியும் போக்கும் புதுமைப்பித்தனிடம் இல்லை. காரணம், அவர் மத்தியதர வர்க்க அறிவு ஜீவிக் குடும்பத்தில் பிறந்தவர். ஒரு தாசில்தாரின் மகன். நெல்லை இந்துக் கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றவர்; அவரது சர்க்கிள் பெரும்பாலும் ஹை சர்க்கி ளாகவே இருந்தது. விந்தனுக்கு முன்னோடியாகப் பல விதத்தில் புதுமைப்பித்தன் விளங்கினார் என்றாலும், விந்தனைப் போலவே அவரும் ஒரு விமர்சன - எதார்த்தவாத எழுத்தாளர் (Critical Realist) என்ற போதிலும், விந்தனைப் போன்ற சார்புநிலை - உழைப்பாளி வர்க்கத்தைச் சார்ந்து நிற்கும் நிலை - அதன் விமோசனத்திற்காகப் போராட வேண்டும் என்ற நிலை - புதுமைப்பித்தனுக்குக் கிடையாது. இந்த வகையில், கொள்கை ரீதியில், புதுமைப்பித்தனை விட விந்தன் மேம்பட்டவர், தீவிரமானவர் என்று தயங்காமல் கூறலாம். வேறு விதமாகச் சொன்னால், பாரதியார், பாரதிதாசன், வ.ரா., புதுமைப்பிததன் ஆகியோரின் உன்னத மரபுகளுக்குச் சிறந்த வாரிசாக விந்தன் விளங்குகிறார்; இதுவே விந்தனின் பெருமையாகும்; தனிச் சிறப்பாகும். பாராட்டு விந்தனின் இலக்கியக் கொள்கையுடன், அவரது எழுத்துத் திறனும் உயர்வாகவே இருந்தது. எனவே தான் கல்கியும், மு.வ.வும், கி. சந்திரசேகரனும், க.நா.சு.வும் அவரைப் பாராட்டியுள்ளார். "வாசகர்களின் மன அமைதியைக் குலைக்கக்கூடிய இயல்பு வாய்ந்த கதைகள்தான். உண்மையான இலககியம் என்று தற்காலத்து