பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 விந்தன் இலக்கியத் தடம் இலட்சிய புருஷர்களும், இலக்கிய மேதாவிகளும் சொல்கிறார்கள். இது உண்மையானால், விந்தனுடைய சிறுகதைகள் உண்மையான இலக்கியம் என்பதில் ஐயமில்லை” என்று “முல்லைக் கொடியாள்” முன்னுரையில் கல்கி கூறுகிறார். 'விந்தன் படைக்கும் பாத்திரங்கள், பெரும்பாலும் "அப்பாவிகளே. அவர்களுக்குச் சமூகத்தின் மேல் வயிற்றெரிச்சல் தோன்றுவதேயில்லை. ஆனால் நமக்கு மட்டும் வயிற்றெரிச்சல் தோன்றுகிறது. “நாயோடு போட்டி போட்டுப் பிழைக்கும் சோலையப்பன், மாம்பழம் விற்று வயிறு வளர்க்கும் அம்மாயி, விளக்கெண்ணெய் வியாபாரம் செய்யாத நாடார் கடை மாணிக்கம் பிள்ளை இவர்களுடைய மனங்கள் எல்லாம், அமைதியான மனங்கள். ஆனால் அவர்களைப் பற்றிப் படிக்கும் மனங்கள், புரட்சி மனங்களாக மாறுகின்றன’ என்று ஒரே உரிமை மதிப்புரையில் மு. வ. எழுதுகிறார் “ஆழ்ந்த மனச் சுழல்களில் நம்மைச் செருகும் தன்மை பெற்றவை இங்குள்ள கதைகளில் சில, ஒரு முறைக்கு இரு முறையாக அவைகளின் கருத்து நம்மைத் துடிக்க வைப்பதற்குக் காரணம் அதுவே அபிப்பிராயத்தின் தொனி விசேஷம் (Suggestion) சில சமயம் நம் உள்ளங்களைத் தொட்டு விடுகிறது” என்று சமுதாய விரோதி என்னும் தொகுப்பின் மதிப்புரையில் கி. சந்திரசேகரன் குறிப்பிடுகிறார். மேற்கண்ட மூவரின் கூற்றுக்கள் முழுக்க முழுக்க விந்தனின் இலக்கியக் கொள்கையை அங்கீகரித்து எழுந்தவையல்ல; ஆனால் விந்த னின் கலைத் திறத்தால், எழுத்து வன்மையால் வசீகரிக்கப்பட்டவை. இத்தகைய திறமை சான்ற எழுத்தாளன், பாரதி பாதையில் நவயுக இலக்கியம் படைத்த எழுத்தாளன், தன் காலத்திலேயே புறக்கணிக்கப்பட்ட கொடுமை எவ்வாறு நிகழ்ந்தது? வணிக நோக்கில் வளர்க்கப்படும் இன்றைய கலை - இலக்கியச் சூழல், இதற்கு ஒரு முக்கியக் காரணம் அல்லவா?