பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(13 விந்தன் - அருள்திரு டாக்டர் தி. தயானந்தன் பிரான்சிஸ் மக்கள் எழுத்தாளர் விந்தன் அவர்களை நேரில் கண்டறிந்தவன், அவரோடு பழகியவன் என்ற முறையில் இந்தக் கட்டுரையைச் சில இனிய நினைவுகளோடு தொடங்குகின்றேன். 1954ஆம் ஆண்டு ஜூலை மாதம் என்று நினைவு. பச்சையப்பன் கல்லூரியில் டாக்டர் மு.வ, பேராசிரியர் அ.ச.ஞா., அ.மு.ப ஆகியோரிடம் பயின்று வந்த காலம். அந்தக் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே பொன்னி, காதல், தேன்கூடு, பிரசண்ட விகடன் போன்ற இதழ்களில் எழுதியிருந்த சில சிறுகதைகளை மஞ்சள் கயிறு என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டிருந்தேன். அப்போதே என்னுடைய இலட்சிய எழுத்தாளர்களாக நான் ஏற்றுக் கொண்டிருந்த திரு. விந்தன், திரு. ஜெகசிற்பியன் ஆகிய இரு வரும் சேத்துப்பட்டுப் பகுதியில் வாழ்கின்றார்கள் என்பது தெரிந்திருந்ததால் இருவரையும் அந்தச் சிறிய சிறுகதைத் தொகுப்பு நூலோடு சந்திக்கலானேன். விந்தன் அவர்களின் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. வாசலிலேயே நின்று கொண்டிருந்த அவர், “வணக்கம் தெரிவித்த, என்னை ஏற இறங்கப் பார்க்கும்போதே என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். எனக்கு வேலூர் என்பதைத் தெரிவித்ததுதான் தாமதம். உடனே, 'வேலுரா, உங்கள் ஊரில் உள்ள விக்டோரியா பிரசில் நான் வேலை பார்த்திருக்கிறேனே! உள்ளே வாருங்கள் என்று என்னை