பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 97 அவர் அறைக்கு அழைத்துச் சென்றார். ஒரு பெரிய எழுத்தாளர், தாம் ஒரு காலத்தில் அச்சுக்கோக்கும் தொழிலாளியாக இருந்ததை என்னிடம் தெரிவித்தபோது எனக்கு வியப்பு மேலிட்டது. அவர் தம்மைப்பற்றி அறிவித்த செய்தி அவருடைய பண்பார்ந்த வெள்ளை உள்ளத்தையும், போலித்திரைகளால் மறைக்கப்படாத மனத்தையும் முகமூடி ஏதுமில்லாமல் இயல்பான சிரிப்போடு காணப்பட்ட அவருடைய முகத்தையும் நான் பார்த்து மகிழ்ந்தவனாய் அவரோடு உரையாட ஆரம்பித்தேன். சுருக்கமான உரையாடல். அடுத்த மாதத்தில் வரவிருக்கும் மனிதன் பத்திரிகையைப் பற்றிப் பேசினார். என்னுடைய மருத்சன்கயிறு நூலை வாங்கிப் புரட்டிப் TO) 0.இ h ) . விமர்சனம் எழுதுகிறேன் என்று கூறினார். அந்தப் பத்திரிகை தொடர்பாகப் புரசையிலிருந்த கோல்டன் அச்சகத்திற்குப் புறப்படுவதற்கு அவர் தயாரானபோது விடைபெற்றுக் கொண்டேன். தொடர்ந்து இரண்டுமூன்று முறை சந்திப்புகள். வேலை வில்லவன் என்ற அக்கால புனைபெயராலேயே அவரிடம் அறியப்படலானேன். ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தினமணி கதிரில் பணியாற்றிய வேளையில் அப்போது அவருடைய உடன் ஊழியர்களாக இருந்த எழுத்தாள நண்பர்கள் இதயன், பி.ஏ.தாஸ் ஆகிய இருவர் வாயிலாக என்னைப்பற்றி அவர் தெரிந்து கொள்வதுண்டு. அவர்கள் மூலமாக என்னுடைய வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து வந்தேன். திரு. விந்த ன் அவர்கள் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததையும், அவர் இறந்துவிட்ட செய்தியையும் திரு. பி.ஏ.தாஸ் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். அதற்கு முன்பே திரு. ஜெகசிற்பியனும், திரு. இதயனும் காலமாகிவிட்டார்கள் எண்பதுகளின் தொடக்கத்தில் அமுதசுரபி இதழில் 'எனது பார்வையில் விந்தன் நூல்கள் என்னும் கட்டுரையைக் கண்டபோது ஆர்வத்தோடு அதை வாசித்து மகிழ்ந்தேன். மு. பரமசிவம் என்பவர் அதை எழுதியிருந்தார்.