பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 விந்தன் இலக்கியத் தடம் அமுதசுரபி அலுவலகத் தோடு தொடர்பு கொண்டு அவருடைய முகவரியைக் கேட்டு வாங்கிப் பாராட்டுக் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பி அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தேன். அதன் விழைவுதான் நண்பர் பரமசிவம் எழுதி 1983ஆம் ஆண்டில் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் ‘பூக்கூடை பதிப்பகம்’ என்னும் பெயரோடு வெளியிட்ட மக்கள் எழுத்தாளர் வித்தன் என்ற நூல். இந்த நூலின் உள்ளடக்க வைப்பு முறை கருத்துத் தெரிவிப்பு ஆகியவை மிகச் சிறப்பாக அமைந்திருந்ததை விமர்சனங்கள் வெளிப்படுத்திக் காட்டின. தொடர்ந்து விந்தன் நாவல்கள் என்னும் ஆய்வு நூலைப் பரமசிவம் வெளிக் கொணர்ந்தபோது மக்கள் எழுத்தாளனின் கொள்கைத் திறம் படைத்த படைப்புகள் தமிழ் வாசகர்களிடம் மறு அறிமுகம் பெற்றன. புதிய தலைமுறையினர் பாலும் பாவையும் நூலை வாசித்தறியும் வாய்ப்பினை "ராணி முத்து வழங்கியது. தொடர்ந்து விந்தன் நூல்களின் மறுபதிப்புக்கள் வர ஆரம்பித்தன. மு. பரசிவம் முயற்சியால் வெளிவந்த வித்தனும் விமர்சனமும், என்னும் நூலில், விந்தனைப் பற்றிப் பல அறிஞர்கள், எழுத்தாளர்கள் கருத்துக்களை அவர் தொகுத்து வழங்கியுள்ளார். அவருடைய அரிய முயற்சியின் விளைவாகவே விந்தன் கட்டுரைகள் என்னும் நூலைக் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளிக்கொணர்ந்துள்ளது. விந்தனுடைய கதைகள் என்றாலும் சரி, கட்டுரைகள் என்றாலும் சரி. அவை கனமான கருவையோ கருத்தையோ கொண்டவையாக இருக்கும். வாசகர்களோடு நேர்த்தொடர்பு கொள்ளும் முறையில் எழுதும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். இக்காலத்தில் செய்தித் தொடர்பு வல்லுநர்கள் எடுத்துரைக்கும் நேர்த்தொடர்பு அல்லது ஆளுமைத் தொடர்பு எத்தகையது என்பதை அவர் அக்காலத்திலேயே புரிந்து கொண்டிருக்கிறார். அவருடைய சிறுகதை நூல்களுக்கும், புதினங்களுக்கும் அவர் எழுதிய முன்னுரைகள் ஒவ்வொன்றும் ஆற்றல் வாய்ந்தவையாக