பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 99 அமைந்தன. தம்முடைய வாசகர்கள் யாவரையும் நடுத்தர மக்களாகவே அவர் கருதி அவர்கள் மனத்தில் இருப்பதைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றவைகளையும் அவர்களைச் சிந்திக்க வைக்கக் கூடியவைகளையும் அவர்களுக்கு உரிமையோடு உணர்த்திக் காட்டிடும் வகையில் தம் முன்னுரைகளை அவர் எழுதியுள்ளார். விந்தன் கதைகள் 1956இல் வெளிவந்தபோது அந்நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையில் இப்படிக் கூறுகிறார்: "இலக்கிய உலகில் பொதுவாக ஓர் அபிப்பிராயம் என்ன அபிப்பிராயம் என்கிறீர்களா? - உங்களால் லேசான விஷயங்களைத்தான் தெரிந்துகொள்ள முடியுமாம், புரிந்து கொள்ள முடியுமாம்! உண்மையான வாழ்க்கையில் பட்டும் படாமல் ஒட்டியும் ஒட்டாமலிருக்கும் செளஜன்யம் மிக்க கதைகளைத்தான் உங்களுக்குப் பிடிக்குமாம்; ருசிக்குமாம்! ‘ராஜாமணி ஊஞ்சலைப் பிடித்துக்கொண்டு நின்றான்; சூடாமணி கேணியில் ஜலம் இறைத்துக் கொண்டிருந்தாள்; ஒரு கணம் இருவர் பார்வையும் பட்டுத் தெறித்தன’ என்பது போன்ற பீடிக்கையுடன் திடீரென்று ஏற்படும் திடீர் காதல்களும், திடீரென்று ஏற்படும் திடீர்க் கல்யாணங்களும் நிறைந்த லைட் மேட் டர்ஸைத்தான் நீங்கள் சுவைப்பீர்களாம், ஹெவி மேட்டர்ஸ் என்றால் எடுப்பீர்களாம், ஒட்டம்! அதற்கெல்லாம் காரணம் என்னவாம் தெரியுமா? உங்களுக்கு அவ்வளவு தூரம் இலக்கிய ஞானம் கிடையாதாம். பக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தெரியுமே தவிர, விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தெரியாதாம்!” இப்படிச் சொல்கிறார்கள் ஐயா, அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்! என்னால் இதை நம்ப முடியவில்லை; உஹ9ம் - நம்பவே முடியவில்லை! எது எப்படியிருந்தாலும், என்னைப் பொறுத்தவரை நீங்கள் அப்படி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இலக்கியத்தில் நான் அப்படிப்பட்ட பாகுபாட்டையும் வகுத்துக் கொள்ளவில்லை.